பக்கம்:ராஜாம்பாள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}2. இராஜாம்பாள்

டார் அப்படிச் செய்வதற்கு அதிகாரங் கொடுக்க வில்லேயே என்று அவர்கள்பேரில் சற்று வருத்தத்தை அடைந்தார். போலீஸ் வழக்குகளே நடத்துவதில் தமக்கு நிகரில்லாத துரைசாமி ஐயங்கார் கோபாலனுக்கு அது சரணையாக வாதிக்க வந்திருக்கிறார் என்று நீலமேக சாஸ்திரிகளுக்குத் தெரிந்தவுடனே, இன் ஸ்பெக்டர் மணவாள நாயுடுவைக் கூப்பிட்டு, மேலதிகாரிகளுக்கு எழுதிச் சர்க்கார் தரப்பில் வாதிப்பதற்காகப் பாரிஸ்டர் பி. கொக்கு துரையை வரவழைக்கச் சொன்னர். மாஜிஸ்டி ரேட்டார் சொல்லியபடியே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்து தந்தி கொடுத்து, பாரிஸ்டர் கொக்கு துரையை வரவழைத்தார். -

இராஜாம்பாளுடைய கொலே வழக்கை விசாரணை செய்யப் போகிறார்கள் என்ற சமாசாரந் தெரிந்தவுடனே மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மூச்சுவிடக்கூட இடமில்லா மல் கச்சேரி முழுவதும் ஜனங்கள் நிறைந்துவிட்டார்கள், ஜனங்களைப் போகும் படி போலீசார் எவ்வளவு பிரயத் தனங்கள் செய்தும் ஒன்றும் உபகாரமில்லாமற்போயிற்று. தங்களுடைய கெளரவத்தைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் முக்கியமான வழக்குகள் வரும் போது தாமதித்து வந்து, தங்களுடைய கெளரவத்தைவிட >ட்சம் பங்கு அதிகமான கெளரவத்தையுடைய பாரிஸ் டர்களையும் கனவான்களையும் காக்க வைப்பது அதிகக் கெளரவ மென்று எண்ணிக்கொண்டிருக்கும் சில மாஜிஸ்டி ரேட்களில் நீலமேக சாஸ்திரியும் ஒருவர். ஆதலால், மாமூ வாய் வரவேண்டிய பத்தரை மணிக்கு எல்லாரும் வந்து கோர்ட்டில் காத்துக் கொண் டிருக்க, சாஸ்திரிகள் சாவ காசமாய்ப் பன்னிரண்டு மணிக்குக் கச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்போதும் 2 மணிவரையில் மற்ற வேலை செய்து பின்புதான் இதை எடுத்தார். x . பாரிஸ்டர் கொக்கு துரை: நான் பாரிஸ்டராகி என் இருபது வருஷ அதுபோகத்தில் இவ்வளவு குரூரமும் கொடுரமுமாகிய கொலையைக் குறித்து வாதிக்கப் பிரமேயம் ஏற்படவில்லை. இப்போது கொலை செய்யப் பட்ட ராஜாம்பாளுடைய நற்குண நற்செய்கைகளைப் பற்றிக் கோர்ட்டாருக்கும் இங்கே வந்திருக்கும் ஜனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/106&oldid=684648" இலிருந்து மீள்விக்கப்பட்டது