பக்கம்:ராஜாம்பாள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 103

களுக்கும் நான் சொல்லவேண்டியதில்லை. இவ்வளவு நம் குண நற்செய்கைகளையுடைய பெண்ணைக் கொலைசெய்வ தற்கு என்ன காரணம் இருக்கலாமென்று சிற்து ஆராய்வோம்; கொலே நடந்த அன்று பகல் இந்தக் கொலைபாதகக் கோபாலன்.....

துரைசாமி ஐயங்கார்: கனம் பொருந்திய கோர்ட்டா ரவர்களே, ம-ா-ா-பூர் பாரிஸ்டர் கொக்கு துரையவர்கள் கோபாலன்தான் கொலை செய்தான் என்று ருஜுப்படுத் தும்வரை அவனைக் கொலைபாதகன் என்று சொல்வது சட்டவிரோதமாகையால் அப்படிச் சொல்லாமல் குற்றஞ் சாட்டப்பட்டவன் என்று சொல்லும்படி ஆக்ஞாபிக்கக் கேட்டுக்கொள்ளுகிறேன். -

கோர்ட்டார்: மணவாள நாயுடு கண்டுபிடித்திருக்கும் சாட்சியம் இன்னதென்று அறிந்த பிற்பாடுகூட, தங்களுக் குச் சந்தேகம் இருக்கிறதோ?

துரைசாமி ஐயங்கார்: வாதி சாட்சிகளையும் பிரதி வாதி சாட்சிகளையும் விசாரிக்குமுன் மணவாள நாயுடு சாட்சியத்தைக் கொண்டே, தாங்கள் கோபாலனைக் குற்ற வாளி என்று தீர்மானம் செய்துவிட்டதாக ஏற்படுகிறது. விசாரணைக்கு முன்னேயே தாங்கள் அப்படி அபிப்பிரா யங் கொண்டிருப்பதால் இந்த வழக்கைத் தாங்கள் விசாரணை செய்வதால் என் கட்சிக்காரனுக்கு நியாயம் கிடைக்காதென்று எனக்குத் தோன்றுகிறது. ஆகையால் தாங்கள் இந்தக் கேசை இரண்டு நாளைக்கு நிறுத்தி வைத்தால், தங்களைத் தவிர வேறே கோர்ட்டார் இந்தக் கேசை விசாரணை செய்யும்படி சென்னை ஐகோர்ட்டுக்கு மனுக்கொடுத்து மாற்றிக்கொள்ளுகிறேன். .

கோர்ட்டார்: ஐயங்காரவர்களே, வாயிலிருந்து தவறு தலாய் ஒரு வார்த்தை வருமுன் அதைப் பிடித்துக் கொண்டு சட்ட விரோதம் என்றும், ஐகோர்ட்டுக்கு மனுக் கொடுத்து மாற்றிக்கொள்ளுகிறேன் என்றும் சொல் லுகிறீர். கோபாலன்ைக் கொலைபாதகன் என்று சொல் வது உமக்கு இஷ்டம் இல்லாவிட்டால் பாரிஸ்டர் கொக்கு துரையை அப்படிச் சொல்லவேண்டாம் என்று சொல்வி விடுகிறேன். மணவாள நாயுடு சாட்சியங்களைப் பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/107&oldid=684649" இருந்து மீள்விக்கப்பட்டது