பக்கம்:ராஜாம்பாள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. இராஜாம்பாள்

தீரா என்று கேட்டேனே தவிர, நான் கோபாலன்தான் கொலே செய்தான் என்று தீர்மானஞ் செய்து கொள்ள வில்லை. நான் இப்படிச் சொன்ன பிற்பாடுகூடக் கேசை மாற்றிக்கொள்ள நீர் அபிப்பிராயப்பட்டால் எனக்குக் கேசை நிறுத்தி வைப்பதில் யாதோர் ஆட்சேபமும் இல்லை.

துரைசாமி ஐயங்கார்: கோர்ட்டாரவர்களே அப்படி அபிப்பிராயப்படவில்லை என்று சொல்லுவதால் இனிக் கேஸ் நடத்துவதில் எனக்கு யாதோர் ஆட்சேபமும்

கோர்ட்டார்: கொக்கு துரையவர்களே, தாங்கள் கோபாலனைக் கொலைபாதகன் என்று சொல்லாமல் ருஜூப் படுத்தும் வரையில் கோபாலன் என்றே சொல்லவேண்டும்.

பா. கொக்கு துரை: கொலை நடந்த அன்று பகல் இந்தக் கோபாலன் ராஜாம்பாளுக்கு எழுதிய கடிதம் இதோ இருக்கிறது. இதைத் தாக்கல் செய்துகொள்ளுங் கள். ராஜாம்பாளை உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-ஆம் நம்பர் வீட்டிற்கு வரச்சொல்லி எழுதியிருக்கிருன், இவன் எழுதியபடி அவள் போனளா அல்லது பலாத்கார மாய்க் கொண்டுபோகப்பட்டாளா என்று தீர்மானஞ் செய்வதற்குத் தற்காலத்தில் சாட்சியங்கள் இல்லை. கூடிய விரைவில் மணவாள நாயுடு கண்டுபிடிப்பதாகச் சொல்லுகிரு.ர். எப்படியாகிலும் ராஜாம்பாள் அங்கே போனுள் என்று மட்டும் தெரிகிறது. நல்லது; அந்த இடத்தில் கோபாலனுக்கும் ராஜாம்பாளுக்கும் எந்த விஷயத்தைக் குறித்து மனஸ்தாபம் ஏற்பட்டதோ அது வும் இப்போது தெரியவில்லை. ராஜாம்பாள், தலையை இரண்டு துண்டாக வெட்டிவிட்டாலும், கிழக்கே உதிக் கிற சூரியன் மேற்கே உதித்தாலும் உன்னைக் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டேன்’ என்று சொன்னதற்குச் சாட்சியம் இருக்கிறது. மேலும் அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு போனபோது, மோசம் போனேன் கோபாலன் என்னைச் சுடலைமாடன் தெரு, 29-வது நெம்பர் வீட்டிலுள்ள குதிலில் என்று ராஜாம்பாள் கைப்பட எழுதிய காகிதத் துண்டு ஒன்று கிடந்தது. இதல்ை என்ன அர்த்தமாகிறது? மோசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/108&oldid=684650" இலிருந்து மீள்விக்கப்பட்டது