பக்கம்:ராஜாம்பாள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 105

போனேன் என்பதால் கோபாலனை நம்பி வந்ததில் மோசம் போனுள் என்றும், கோபாலன் என்னைச் சுடலைமாடன்” என்பதனால் கோபாலன் தன்னை மேற்சொன்ன இடத் திற்குக் கொண்டுபோய், இன்னது செய்யப்போகிருன் என்று எழுதுமுன் யாரோ வந்ததனுலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினலோ எழுத முடியவில்லே என்றும் தோன்றுகிறது. கோபாலன் யோக்கியனென்று அதுவரையில் நம்பியிருந்தவளுக்கு அன்றுதான் அவ லுடைய சகிக்கக்கூடாத துர்க்குணம் ஏதாவது தெரிந் திருக்கு மென்றும், அவனுடைய ரகசியம் வெளிப்பட்டுப் போகவே தன்னைக் கல்யாணஞ் செய்துகொள்ளும்படி பலாத்காரஞ் செய்திருக்கலாமென்றும், அவள் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டேன் என்றதன்பேரில் இனி அந்த ரகசியம் வெளிப்பட்டுப்போகுமே என்ற எண்ணத்தால் சுடலைமாடன் தெருவிற்குக் கூட்டிக்கொண்டு போய்க் கொலே செய்ய அவனுடன் உடந்தையாக இருந்தவர்களி டம் யோசனை செய்துகொண் டிருக்கையில் ராஜாம்பாள் அந்தச் சீட்டு எழுதியிருக்கலாம். என்றும் தோன்றுகிறது. சுடலைமாடன் தெருவிற் போய்ப் பார்க்கையில் அவன் கொலை செய்து கொளுத்திய பிரேதத்தை வைத்துக் கொண்டு அழுவதுபோல் ஜாடை செய்துகொண் டிருந் தான். ராஜாம்பாள் சீட்டு எழுதியது கோபாலனுக்குத் தெரியாதாகையால், சாவகாசமாய்க் கொலை செய்து சுட்டுக்கொண் டிருந்திருப்பான். அதற்குள்ளாகத் தெரு வில் மணவாள நாயுடுவைக் கண்டதும் ஒடிப்போய்ப் பிரே தத்தை மார் பின் மேல் எடுத்து வைத்து அழுவதுபோல் ஜாடை செய்துகொண் டிருந்திருப்பான். இவ்வளவும் போதா தென்று, ‘கோ’ என்னும் எழுத்து ஒரு மூலையில் எழுதப்பட்ட சித்திரவேலை செய்த ரத்தந் தோய்ந்த கைக்குட்டையொன்று கிழித்துச் சாம்பவில் மறைத் து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் குட்டை கோபாலனுடை யது என்பதற்குச் சாட்சியங்கள் இருக்கின்றன. கொலே செய்யும் பாதகர்கள் எப்போதும் யாருக்குந் தெரியா மலும் சிறிதாவது சாட்சியம் இல்லாமலுங் கொலை செய் வது வழக்கமல்லவா? இவ்வளவு சாட்சியங்களுடன் அகப் பட்டது சாமிநாத சாஸ்திரிகள் செய்திருக்கும் புண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/109&oldid=684651" இலிருந்து மீள்விக்கப்பட்டது