பக்கம்:ராஜாம்பாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரீ புருஷ சம்பாஷணை 7

சமாசாரம் இருந்தால் சொல்லு. இல்லாவிட்டால் படுத்து நித்திரை செய்வோம். -

கனகவல்லி: சமாசாரம் இல்லாமலா நீங்கள் கட்டா யமாய்த் திட்டுவீர்களென்று தெரிந்தும் உங்களை வந்து எழுப்பினேன்?

சாமிநாத சாஸ்திரி: இப்பொழுது சொல்லித்தான் நடக்கவேண்டியது என்றால் ஜல்தியாய்ச் சொல்லித் தொலை. இல்லாவிடில் நாளைக் குப் பேசிக்கொள்வோம்; எனக்குத் துாக்கம் வருகிறது.

கனகவல்லி நீங்கள் எனக்குக் கட்டின தாலியை விட எள்ளத்தனை நகையாவது செய்து போடவில்லை. என்பதைக் குறித்து இந்த ஊரெல்லாம் சிரிக்காமற் சிரிக் கிறது. அது போகட்டும். நீங்கள் சம்பாத்தியஞ் செய்து பணத்தை மூட்டை மூட்டையாய்க் கொண்டு வருகிறீர்கள். இந்தா, உன் செலவுக்கு வைத்துக்கொள் என்று ஒரு செம்பாலடித்த காசு இதுவரையில் கொடுத் தீர்களா?

சாமிநாத சாஸ்திரி: ஏண்டி! இப்படிப் போது போக்குகிறாய்? இத்தோடு பல தரம் இந்த விஷயத்தைக் குறித்துக் கேட்டிருக்கிறாய்; நானும் ஒவ்வொரு தரமும் காரணம் சொல்வியிருக்கிறேனே. உனக்கு வேண்டிய சாமான்களை நீ எப்போது கேட்கிருயோ அப்போதெல் லாம், அவசியமானவற்றை நான் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கும்போது உனக்குப் பணம் காசு எதற்கு?

கனகவல்லி: ஆமாம், எனக்குச் சாமான்கள் வாங் கிக்கொடுப்பதில் நீங்கள் தவறுவதே கிடையாது. அந்த ஜம்பத்தை அப்படிக் கட்டுங்கள். என் தாயோடு கூடப் பிறந்த சித்தி மகள் குழந்தை பெற்றாள். அந்தக் குழந் தைக்கு வெல்வெட் பாவாடை தைத்துக் கொடுக்கச் சொன்னேன்; நீங்கள் வாங்கித் தைத்துக் கொடுத்து விட்டுத்தானே மறு காரியம் பார்த்தீர்கள்?

சாமிநாத சாஸ்திரி. உன்னுடைய முட்டாள்தனத் திற்குச் சுவரில் போய் முட்டிக்கொண்டாலும் தீராது. இப்போது பிறந்த குழந்தைக்குப் பாவாடை ஏதுக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/11&oldid=677377" இலிருந்து மீள்விக்கப்பட்டது