பக்கம்:ராஜாம்பாள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 இராஜாம்பாள்

வசந்தான் என்பதிற் சந்தேகங் கிடையாது. இனிச் சாட்சிகளை விசாரிக்கிறேன். இன்ஸ்பெக்டர் மணவான நாயுடுவே! உமக்கு இந்தக் கேசில் என்ன தெரியுமென்று விவரமாய்ச் சொல்லும்,

மணவாள நாயுடு; புதன்கிழமை ராத்திரி மூன்று மணிக்கு என்னைச் சாமிநாத சாஸ்திரி காணுமற் போன் அவர் புத்திரியைக் கண்டுபிடிக்கச் சொன்னர். அவள் கைப்பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தேன். அதில் கோபாலன் எழுதிய கடிதம் அகப்பட்டது. அது தர்ன் கோர்ட்டில் முதலில் தாக்கல் செய்யப்பட்டது. அதைக் கண்டவுடனே உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-வது நெம்பர் வீட்டிற் போய்த் தேடினதில் கோர்ட்டில் இரண்டாந்தரம் தாக்கல் செய்யப்பட்ட கடிதம் அகப்பட்டது. அங்கிருந்து சுடலைமாடன் தெரு, 29-வது நெம்பர் வீட்டிற்குப் போனபோது கோபாலன் தன் மார்பின்மேல் ராஜாம்பாளின் பிரேதத்தைச் சாய்த்துக்கொண்டிருந்தான். உடனே அவனே ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுப் பிரேதத்தை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி னேன். மறுபடியும் கொலை நடந்த இடத்தைத் தேடி னதில் சாம்பலுக்குள் இந்தக் கைக்குட்டை அகப்பட்டது. கோர்ட்டார்: ஐயங்காரவர்களே! இந்தச் சாட்சியை நீர் ஏதாவது கேள்விகள் கேட்பதாயிருந்தால் கேட்கலாம். துரைசாமி ஐயங்கார்: நான் இப்போது கேள்விகள் கேட்கமாட்டேன். செஷன்ஸ் கோர்ட்டில் கேட்டுக் கொள்ளுகிறேன். * . .

கோர்ட்டார்: இரண்டாவது சாட்சி சாமிநாயுடுவைக் கூப்பிடு. -

பா. கொக்கு துரை: சாமி நாயுடு, உமக்கு இந்தக் கேசில் தெரிந்த சங்கதிகளைச் சொல்லும்,

சாமி நாயுடு; புதன்கிழமை ராத்திரி ஊர் பூராவும் வேடிக்கைகள் நடந்துகொண் டிருந்தன. ஒரு பக்கத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு நான் உலகளந்த பெருமாள் கோவில் தெருப்பக்கத்திற் போகும்போது ஜலபாதைக்கு வந்தது. 25-ம் நெம்பர் வீட்டில் யாரும் இல்லையாதலால், அங்கே ஜலபாதைக்குப் போகப்போனேன். அப்போது அந்த வீட்டில் ராஜாம்பாளின் குரல் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/110&oldid=684652" இலிருந்து மீள்விக்கப்பட்டது