பக்கம்:ராஜாம்பாள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G8 இராஜாம்பாள்

நடேச சாஸ்திரி. ராஜாம்பாள் ஒரு வாரத்திற்கு முன்னுல் சில சாமான்கள் வாங்கச் சென்னைக்கு வந்தர்ள் வந்தவள் நான் இருக்கும் இடத்திற்கு வந்தாள். கோபா லனே விட்டு வேறொருவரைக் கல்யாணஞ் செய்துகொள்: எப்படி ஒப்புக்கொண்டாய் என்று கேட்டேன். கோபு, லன ஜனங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவன் என்டு குர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு கொடியவன் என்று தனக்குத் தெரிந்ததன்பேரில்தான் வேறொருவரைக் கல்யா ணஞ் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், கோபாலனுக்கு நம்பிக்கை கெட்டுப் போகாதபடி அவனைக் கடைசி நிமிஷத் திற் கல்யாணஞ் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட வள்போல் அபிநயிக்கிறதாகவும், கல்யாணத்திற்கு முந்தின ராத்திரி அவனை நேரில் கண்டு அவனுடைய கொடிய செய்கைகளை அவனிடஞ் சொல்லிவிட்டு அப்பால், தீர்மா னஞ் செய்தபடி நீலமேக சாஸ்திரிகளைக் கல்யாணஞ் செய்துகொள்ளப் போவதாகவுஞ் சொன்னுள். அப்படி: செய்வது சரியல்ல என்றும், ஒரு சமயம் அவனுக்குக் கோபம் வந்தால், வாஸ்தவமாக அவன் கொடியவளுக இருந்தால் ஏதாவது கெடுதல் செய்வான் என்றும் சொன் னேன். அதைக் குறித்து நான் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும், அவளுக்கு ஏதாவது அபாய்ம் நேரிட்டால் மட்டும் என்னை இந்தச் சமாசாரங்களைச் சொல்லும்படியும் என்னிடம் வாக்குறுதி பெற்றுக்கொன் டாள். அவள் செய்வது சரியல்ல என்றும், அந்த விஷயத்தைக் குறித்துச் சாமிநாத சாஸ்திரிகளுக்கு எழுது வதாகவும் சொன்னேன். நீங்கள் என் இஷ்டத்திற்கு விரோதமாய் எழுதினுலும் நடந்தாலும் அதுமுதல் நான் உங்கள் முகத்தில் விழிக்கமாட்டேன்’ என்று அவள் சொன்னதால் மெளனமாய் இருந்தேன். இதுதான் எனக் குத் தெரிந்த சங்கதி. *

இப்படி நடேச சாஸ்திரி வாக்குமூலங் கொடுத்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்றுகொண் டிருந்த கிழவன் ஒருவன் துரைசாமி ஐயங்காரிடம் ஒரு கடிதத் துண்டைக் கொடுத்தான். அதில் பின்வருமாறு எழுதி

யிருந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/112&oldid=684654" இலிருந்து மீள்விக்கப்பட்டது