பக்கம்:ராஜாம்பாள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 109:

  • நடேசன் எப்போது வந்தான் என்றும், இதைப்
   $ } தடசி போலொத்த கேள்விகளையும் விவரமாய்க் கேளுங்கள். கோவில் தன்.” கோர்ட்டார்; ஐயங்காரவர்களே! இந்தச் சாட்சியை ஏதாவது கேள்விகள் கேட்பதாயிருந்தால் கேளுங்கள்.

துரைசாமி ஐயங்கார்: நடேச சாஸ்திரிகளே, தாங்கள் காஞ்சீபுரத்திற்கு எப்போது வந்தீர்கள் ?

நடேச சாஸ்திரி: நான் வந்தது தங்களுக்குத் தெரி யாதா? தாங்கள் கேட்பது ஆச்சரியமா யிருக்கிறதே.

துரைசாமி ஐயங்கார்: நான் கேட்ட கேள்விக்குத் தயவு செய்து மறுமொழி சொல்லுங்கள். எனக்குத் தெரிகிறதற்கும் தாங்கள் விடை சொல்வதற்கும் வித்தி யாசம் இருக்கிறது. -

நடேச சாஸ்திரி; ஆனல் சொல்லுகிறேன். நேற்று வியாழக்இழஒழ காலை ஒன்பது மணிக்குக் காஞ்சீபுரம் வருகிற ரெயிலில் வந்தேன்.

துரைசாமி ஐயங்கார்: எப்போதும் தாங்கள் முதல் வகுப்பு வண்டியில் பிரயாணஞ் செய்வது வழக்கமா யிற்றே; இப்போதும் அப்படியே முதல் வகுப்பு வண்டியில் தான் வந்தீர்களா? -

பா. கொக்கு துரை: கோர்ட்டாரவர்களே, என் நண்பர் வக்கீல் துரைசாமி ஐயங்கார் கேட்கும் கேள்விகளுக்கும் இந்தக் கேசுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லே யாதலால் வீண் கேள்விகளைக் கேட்டு நேரத்தைக் கடத்துவதை நான் ஆட்சேபிக்கிறேன். -

துரைசாமி ஐயங்கார்: முப்பத்தைந்து வருஷ கால மாய் வக்கீல் உத்தியோகஞ் செய்யும் நான், காரணமில்லா மல் அநாவசியமான கேள்விகளைக் கேட்டு நேரத்தைக் கடத்துவேனே என்பதைக் குறித்து இருபது வருஷ கால மாய்ப் பாரிஸ்டர் வேலை செய்துவரும் கொக்கு துரையவர் கள் யோசனை செய்யாமல் பேசினதற்காக நான் மனவருத் தப்படுகிறேன். கட்சிக்காரனிடத்தில் பணம் வாங்கினதற் காக வீண் கேள்விகளைக் கேட்டு நேரத்தைப் போக்கும் சில பாரிஸ்டர்களையும் வக்கீல்களையும்போல் என்னேயும் நினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/113&oldid=684655" இலிருந்து மீள்விக்கப்பட்டது