பக்கம்:ராஜாம்பாள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 இராஜாம்பாள்

துக்கொண்டார்போல் இருக்கிறது. சட்டத்துக்கு விரோத மாக நான் கேள்விகள் கேட்டால் மாத்திரம் கோர்ட்டா ருக்கு என்னே நிறுத்தும்படி சொல்லுவதற்கு அதிகா ரம் உண்டே தவிர இந்தக் கேள்விகளை யெல்லாம் கேட்பதை ஆட்சேபிக்கச் சட்டம் இல்லை.

பா. கொக்கு துரை: கோர்ட்டாருக்குச் சகல அதி காரங்களும் சட்டப்படி இருக்கின்றன.

இதையெல்லாங் கேட்டுக்கொண் டிருந்த நீலமேத சாஸ்திரிகள் வக்கீல் துரைசாமி ஐயங்காரின் சாமர்த்தி யத்தையும் கெளரவத்தையும் நன்கு உணர்ந்தவராதலா லும் எப்போதும் அநேகமாய்ப் பாரிஸ்டர்கள் நியாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்சேபங்கள் செய்து அதைக் குறித்து வாதித்து நேரத்தைக் கடத்துவது சகஜ மாதலாலும், துரைசாமி ஐயங்கார் காரணமில்லாமல் கேட்கமாட்டார் என்று தெரிந்து, கோர்ட்டாருக்கு எது நியாயமான கேள்வி என்றும், எது அக்கிரமமான கேள்வி யென்றும் தெரியுமாதலால் கோர்ட்டாருடைய வேலையைக் குறித்துப் பாரிஸ்டர் கொக்கு துரை புத்தி சொல்லவேண்டியதில்லை யென்றும், சட்டத்துக்கு விரோத மான கேள்விகளைக் கேட்டால்மட்டும் அப்போது ஆட் சேபிக்கும்படிக்கும் பாரிஸ்டர் கொக்கு துரைக்குச் சற்றுக் கடுமையாய்ச் சொன்னர். -

துரைசாமி ஐயங்கார்: முதல் வகுப்பு வண்டியில் தான் வந்தீர்களோ?

கடேச சாஸ்திரி: ஆம்; முதல் வகுப்பு வண்டியில் தான் வந்தேன்.

துரைசாமி ஐயங்கார்: ஒரு முழு முதல்வகுப்பு வண்டி யைத் தீர்மானஞ் செய்துகொண்டு வந்தீர்களா ? அல்லது ஒரு முதல் வகுப்பு டிக்கட்டு மாத்திரம் வாங்கி வந்தீர் G?

நடேச சாஸ்திரி: ஒரு முதல் வகுப்பு டிக்கட்டுத்தான் வாங்கிவந்தேன்.

துரைசாமி ஐயங்கார்: காலையில் எழும்பூரில் ஏறினர் களா? அல்லது வேறு எங்காவது இஷ்டர் வீட்டில் தங்கி வந்தீர்களா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/114&oldid=684656" இலிருந்து மீள்விக்கப்பட்டது