பக்கம்:ராஜாம்பாள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 இராஜாம்பாள்

நடேச சாஸ்திரி. நாலு மணிக்கு வருவதாக ராஜாம்பாள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள். நாலு: மணிக்குச் சரியாய் வராததால் கடிகாரத் தைக் கையி; வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சரியா, நாலு அடித்துப் பத்து நிமிஷத்திற்கு வந்தாள். -

துரைசாமி ஐயங்கார்: ராஜாம்பாள் எழுதிய கடிதத்தைக் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த முடியுமோ?

நடேச சாஸ்திரி. ராஜாம்பாளுக்கு இப்படித் து: மரணம் சம்பவிக்குமென்றும், தாங்கள் என்னை அந்தத் கடிதத்தை ஆஜர்ப்படுத்தச் சொல்லுவீர்கள் என்றும், எனக்கு முன்னலேயே தெரிந்திருந்தால் நான் அதைப் பத்திரப்படுத்தியிருப்பேன். -

துரைசாமி ஐயங்கார்: கேட்ட கேள்விக்கு ஜவாப்புச் சரியாய்ச் சொல்லவில்லேயே? தேடிப் பார்த்தாவ, ஆஜர்ப்படுத்த முடியுமோ? - -

நடேச சாஸ்திரி: எனக்கு வந்த கடிதங்களை நான் பந்தோபஸ்துச் செய்வதில்லே. படித்தவுடனே பரிகரித்து விடுவது வழக்கமாதலால் அதையும் அப்படியே செய்து விட்டேன்; ஆதலால் ஆஜர்ப்படுத்த முடியாது.

துரைசாமி ஐயங்கார்: ராஜாம்பாள் தனிமை யாய்த் தங்கள் வீட்டிற்கு வந்தாளா? அல்லது அவளோடு கூட யாராவது வந்தார்களா?

நடேச சாஸ்திரி: தனிமையாய்த்தான் வந்தாள். கூட யாரும் வரவில்லை.

துரைசாமி ஐயங்கார்: உங்கள் வீட்டிற்கு வந்தது யாருக்காவது தெரியுமா? -

கடேச சாஸ்திரி: யார் பார்த்தார்கள் என்றும், யாருக்குத் தெரியும் என்றும் எனக்குத் தெரியாது.

துரைசாமி ஐயங்கார்: இதற்கு முன்னல் எப்போ தாவது ராஜாம்பாள் தங்களுக்குக் கடிதம் எழுதியிருக் கிருளா?

நடேச சாஸ்திரி: இல்லை. - துரைசாமி ஐயங்கார்: ஆல்ை இப்போது மாத்திரம் கடிதம் எழுதின காரணம் என்ன? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/116&oldid=684658" இலிருந்து மீள்விக்கப்பட்டது