பக்கம்:ராஜாம்பாள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 115

பெரிய துரைகளுக்கு விருந்தளித்தார். அந்த விருந்துக்கு என்னையும் அழைத்திருந்ததால் நானும் போயிருந்தேன். துரைசாமி ஐயங்கார்: அங்கே எத்தனை மணிவரை யில் இருந்தீர்கள் ?

நடேச சாஸ்திரி: பத்தரை மணி வரையில் இருந் தேன்.

துரைசாமி ஐயங்கார்: தாங்கள் விருந்துக்குப் போன சங்கதியாவது யாருக்காவது தெரியுமா? அல்லது அதுவும் ராஜாம்பாள் தங்கள் வீட்டிற்கு வந்ததை யாரும் பார்க்கவில்லையே; அதைப்போல் யாரும் பார்க்க வில்லையா? - நடேச சாஸ்திரி: அங்கே போஜனத்திற்கு வந்தி ருந்த துரைகள் எல்லோருக்குந் தெரியும். அது போதா தென்றால் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டுகள் இருவர் பார்த் தார்கள். ஒரு மாஜிஸ்டிரேட்கூட, ‘பத்தடித்து இரு பத்தைந்து நிமிஷமாயிற்றே; இனி நாம் வீட்டிற்குப் போகவேண்டியதுதானே?’ என்று என்னைக் கேட்டார். தங்களுக்கு அந்த விஷயத்தில் சிறிதாவது சந்தேகம் இருந்தால் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொள்ளலாம்.

இன்னும் கேட்கவேண்டிய கேள்விகளைச் செஷன் ஸ் கோர்ட்டில் கேட்டுக்கொள்வதாகச் சொல்வித் துரைசாமி ஐயங்கார் உட்கார்ந்தவுடனே நான்காவது சாட்சி அளிஸ் டென்ட் சர்ஜன் காவன்னவைக் கூப்பிடச்சொல்லிக் கோர்ட்டார் உத்தரவு பண்ணினர்கள்.

பாரிஸ்டர் கொக்கு துரை: மிஸ்டர் காவன்னு! தாங் கள்தான இறந்துபோன ராஜாம்பாளின் பிரேதத்தைச் சோதனை செய்தவர்கள்?

காவன்னு துரை: நான் மாத்திரஞ் சோதிக்கவில்லை. பிரேதத்தின் சமீபத்திற் போய்ப் பார்த்தவுடனே, எனக்குச் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால் சர்ஜன் பால் துரைக்குத் தந்தி கொடுத்து அவர் வந்ததன்பேரில் நானும் அவருமாகச் சோதனை செய்தோம்.

பா, கொக்கு துரை: என்ன சந்தேகம் ஏற்பட்டது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/119&oldid=684661" இலிருந்து மீள்விக்கப்பட்டது