பக்கம்:ராஜாம்பாள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராஜாம்பாள்

கிறீர்களே, இதில் ராஜாம்பாள், கட்டாரியின் காயத் தால் இறந்தாளா? துப்பாக்கியின் குண்டால் இறந் தாளா? விஷத்தால் இறந்தாளா ? அல்லது மூன்றினுடைய கொடுரமுஞ் சேர்ந்து இறந்தாளா?

காவன்ன துரை: மூன்றில் ஏதாவது ஒன்றே அவளேக் கொல்லப் போதுமானது.

துரைசாமி ஐயங்கார்: தாங்கள் சொல்லுவது எனக்கு நன் ருய்ப் புலப்படவில்லை. தயவுசெய்து சற்று விஸ்தரித்துச் சொல்லுங்கள். -

காவன்னு துரை: அவளுக்குப் புதன்கிழமை ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்க லாம். கட்டாரியால் குத்திக் கொல்லாமலும், துப்பாக்கி யாற் சுடாமலும் இருந்திருந்தாற்கூட ராத்திரி ஒரு மணிக்கு அவள் விஷத்தின் கொடுரத்தால் இறந்து போயிருப்பாள். விஷம் கொடுக்கவில்லை என்றும் , துப்பாக் கியால் சுடவில்லை என்றும் வைத்துக்கொண்டாலும் கட்டாரியின் குத்து மாத்திரமே அவள் பிராணன் போவ தற்குப் போதுமானது. விஷமும் கட்டாரிக் குத்தும் இல்லாவிட்டாலும் துப்பாக்கியின் குண்டே கொல்வதற்குப் போதுமானது. ஆகவே மூன்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே மரணம் நிச்சயந்தான்.

துரைசாமி ஐயங்கார்: விஷம் கொடுத்ததுதான் ராத்திரி ஒன்பது மணிக்கு இருக்கலாம் என்று சொன்னிர் கள். கட்டாரியின் குத்து முன்னுல் இருக்குமா அல்லது துப்பாக்கியால் சுட்டது முன்னுல் இருக்குமா என்று தயவுசெய்து சொல்லுங்கள்.

காவன்ன துரை: துப்பாக்கியால் சுட்டதும் கட்டாரி யால் குத்தினதும் ஏககாலத்தில் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். .#

துரைசாமி ஐயங்கார்: இரண்டும் ஏககாலத்தில் நடந்திருக்கும் என்று தாங்கள் சொன்னீர்களே. ஒரே மனிதன் இவ்விரண்டு வேலைகளையும் ஏககாலத்தில் செய்ய முடியுமா? *

காவன்ன துரை: முடியவே முடியாது. கட்டாரியால் குத்தினது பக்கத்திலிருந்து குத்தியிருக்கவேண்டும். துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/122&oldid=684664" இலிருந்து மீள்விக்கப்பட்டது