பக்கம்:ராஜாம்பாள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடுகுடுப்பைக்காரன் 125

முன்னுல் நடேசனிடமிருந்து லோகசுந்தரிக்கு வந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதி யிருந்தது.

‘எனதன்பிற் சிறந்த ஆசைநிறைந்த, இன்பம் விளைந்த, சொந்தம் மிகுந்த அரிய கண்மணியாகிய லோகசுந்தரத்திற்கு இரவிலும் பகலிலும், கனவி லும் நினைவிலும் சதா உன்னையே நினைத்துக்கொண் டிருக்கும் உன் சொந்த நடேசன் எழுதிக்கொள்வது என்னவென்முல், நான் பத்துத் தினங்களுக்கு முன் ல்ை காஞ்சீபுரம் வந்தபோது நீ சொல்லியபடி நடத்துவதற்காக வேண்டிய பிரயத்தனங்களெல் லாஞ் செய்துவிட்டேன். மேலும் கல்யாணத்திற்கு முந்தின நாள் அதாவது புதன்கிழமை ராத்திரி, பத்தரைமணி வரையிலும் ஒரு விருந்துக்கு வருவ தாகச் சம்மதித்திருக்கிறேன். ஏனென்றால் விருந் துக்கு அநேக பிரபுக்கள் வருவார்கள். அன்று ராத் திரி நான் எங்கே இருந்தேனென்று ஒருகால் சந் தேகம் வந்தால் அவர்களெல்லாஞ் சாட்சி சொல் வார்களென்று அப்படித் தீர்மானித்தேன். பத்தரை மணிக்கு மோட்டார் வண்டி ஏறினல் குறிப்பிட்ட நேரம் வந்து சேர்ந்துவிடுகிறேன். இனி இந்த விஷ யத்தைக் குறித்துக் கிஞ்சித்தாவது நீ சஞ்சலப்பட வேண்டியதில்லை. இக் கடிதத்தைப் படித்தபின் பரி கரித்துவிடு.

- இப்படிக்கு உனது சொந்த நடேசன்.” குடுகுடுப்பை சொல்லிய இரண்டு மணி நேரத்திற்கு இன்னும் ஐந்து நிமிஷங்களே இருந்ததால் இந்த மூன்று கடிதங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு மற்றவைகளே யெல்லாம் முன்னல் இருந்தபடியே வைத்து, பெட்டியை முடிச் சூக்ஷம அறைக்குள் வைத்து அதையும் முடிவிட்டு, உள்ளே போட்டிருந்த தாழ்ப்பாளைத் திறந்துவிட்டு, மந்தி ரம் செய்பவன் உட்கார்ந்திருப்பதைப்போல் கோவிந்தன் உட்கார்ந்திருந்தான். அதற்குள் சரியாய் இரண்டு மணி நேரம் ஆகிவிடவே சுந்தரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். அப்போதுதான் மந்திரஞ் செய்வதை விட்டு எழுந்திருப்பவன்போல எழுந்திருந்த குடுகுடுப்பை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/129&oldid=684671" இலிருந்து மீள்விக்கப்பட்டது