பக்கம்:ராஜாம்பாள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 26 இராஜாம்பாள்

வேண்டிய மந்திரம் போட்டுவிட்டதாகவும் இனி, பாதாளி பர்மாக்காரி மந்திரம் ஏருவிட்டாலும் வேணு, நாயுடு உடம்பு கொஞ்சம் அசெளக்கியமாக இருந்துதான் எழுந்திருப்பாரென்றும் சொல்லி, இனம் வாங்குவதற்கு அன்றைக்குப் பதினேந்தாம் நாள் வருவதாகச் சொல்வி விட்டுப் புறப்பட்டு வெளியே வந்து, ஜக்கம்மா பலுகவே, மன்ச்சி வாக்கு பலுகவே, பலுகவே, குடு குடு, குடு குடு, குடு குடு’ என்று குடுகுடுப்பையை அடித்துக்கொண்டே போனன். .

அன்று மத்தியான்னம் கோவிந்தன், வக்கீல் துரைசாமி ஐயங்காருடன் போய், சாமிநாத சாஸ்திரிகளைக் கண்டு, முன்னுல் எழுதிவைத்த உயிலே உடனே ரத்துச்செய்து போடவேண்டுமென்றும் இல்லாவிட்டால் சாஸ்திரிகளின் பிரானனுக்கே ஒருவேளை அபாயம் வரக்கூடுமென்றும் சொல்லி அந்த உயிலை ரத்துச் செய்துவிட்டார்கள். உயில் ரத்துச் செய்த சமாசாரத்தைத் துரைசாமி ஐயங்காரவர் களே நடேசனிடம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிப் பக்குவமாய்ச் சொல்லிவிடுவதாகச் சொன்னர், கோவிந்தன் சாமிநாத சாஸ்திரிகளிடம் தமக்குக் காஞ்சி புரத்தில் ஆகவேண்டிய வேலே ஆகிவிட்டதென்றும், இனித் தாம் செய்யவேண்டிய வேலையெல்லாம் சென்னை யில் இருப்பதால் அங்கே செல்லவேண்டுமென்றும் சொன்னர். இதுவரையில் கோபாலனுக்கு அனுகூல மாகிய சாட்சியங்கள் ஏதாவது கண்டுபிடித்தாயா?? என்று சாஸ்திரிகள் கேட்டார்.

கோவிந்தன். நன்றா ய்த் தெரியாமல் யாருக்கும் நான் ஒன்றும் சொல்வதில்லே என்பது தங்களுக்கு நன்றாய்த் தெரியுமே. செஷன்ஸ் கோர்ட்டில் கேஸ் வரும் வரையில் நான் உயிருடன் இருந்தால் கட்டாயமாய்க் கோபாலன் குற்றவாளி அல்லவென்று ருஜுப்படுத்துவ தன்றியில் வாஸ்தவமான குற்றவாளிகளையுங் கண்டு பிடித்து விடுகிறேன். இனி இந்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சமாவது கவலை வைக்கவேண்டாம்.

இவ்வாறு சொல்லிக் கோவிந்தனும் துரைசாமி ஐயங்காரும் சாமிநாத சாஸ்திரிகளிடம் விடைபெற்றுச் சென்னைக்குச் சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/130&oldid=684672" இலிருந்து மீள்விக்கப்பட்டது