பக்கம்:ராஜாம்பாள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மோகினி

@#yri கோர்ட்டில் கோபாலனுடைய வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டுமென்று தீர்மானித்த மூன்றாம் நாள், லோகசுந்தரி உயர்ந்த ஆடையாபரனங் களை அணிந்துகொண்டு கோபாலன அடைத்திருக்கும் இடத்திற்குப் போய்க் காவலிருக்கும் சேவகர்களுக்குப் பத்து ருபாய் கொடுத்து உள்ளே போய்க் கோபாலனக் கண்டு, அதிக விசனப்பட்டவள்போல் அபிநயித்து அழுது கொண்டிருந்தாள். சூது சற்றும் அறியாத கோபாலன் அவள் வாஸ்தவமாகவே வருத்தப்படுகிருள் என்று எண்ணி அவளைச் சமாதானப்படுத்தப் பின்வருமாறு பேசிஒன்:

கோபாலன் லோகசுந்தரி, நீ இவ்விடத்திற்கு வந் ததை யாராவது பார்த்தால் உன்னை ஏளனம் செய்யமாட் டார்களா? பூர்வ ஜன்மத்தில் நான் பாவம் செய்திருப்ப தால்தான் இந்த ஜன்மத்தில் கொலை செய்தேனென்று அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையில் அடை பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட இடத்திற்கு உன்னைப் போல் ஒத்தவர் வருவது தகாதே. -

லோகசுந்தரி : கோபாலா, இத்தனை வருஷ காலமாய் நீ என்ைேடு பழகியும் இன்னும் என்னுடைய சுபாவம் இப்பேர்ப்பட்டதென்று அறியவில்லேபோல் இருக்கிறது. அபாயம் நேரிட்ட காலத்திலும், யாரும் ஒத்தாசை செய் யாத காலத்திலும் யாரொருவர் அக் கஷ்டங்கள் தங்க ளுக்கு நேரிட்டதாக எண்ணி ஒத்தாசை செய்ய வருகிறார் களோ அவர்களே வாஸ்தவமாகிய இஷ்டரென்பதை நீ மறந்து போளுப்போல் இருக்கிறது. உன்னுடைய பெருந் தன்மையையும், குளுநுபவங்களையும் நன்கறிந்த நான் நீ ராஜாம்பாளைக் கொலை செய்யவில்லையென்று சத்தியங் கூடப் பண்ணுவேன். -

கோபாலன் லோகசுந்தரி, இரண்டொருவரைத்

தவிர இவ்வூரில் உள்ளவர்களெல்லாம் நான்தான் ராஜாம்ப்ாளைக் கொலை செய்தேனென்று சொல்லும் போது, நான் கொலை செய்யவில்லை என்று நீ உறுதியாகச் சொல்வதற்காக உனக்கு வந்தனமளிக்கிறேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/131&oldid=684673" இலிருந்து மீள்விக்கப்பட்டது