பக்கம்:ராஜாம்பாள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இராஜாம்பாள்

லோகசுந்தரி : கோபாலா அந்நியர்களிடத்தி, பேசுவதைப்போல் என்னிடம் பேசுகிருயே, தவிர, சிறு குழந்தைகள் முதலே நம் இருவருக்கும் உடல் இரண்டும் உயிர் ஒன்றுமாக இருந்ததாகப் பாவித்து நீ பேச வில்லையே. உனது வந்தனத்தை ஏறபதறகாகவா யார் என்ன சொன்னபோதிலும் பரவாயில்லை என்பதாக உன்னைப் பார்க்க இங்கே வந்தேன்? இனிமேலாவது, உனக்கு வந்தனமளிக்கிறேன் என்றாவது இதைப்போ லொத்த அந்நியர்களிடம் பேசும் உபசார வார்த்தைகண் யாவது நீ என்னிடம் பேசாமல் இருக்கவேண்டுமென்று T மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன். உன் வாயி, லிருந்து அப்பேர்ப்பட்ட வார்த்தைகள் வருவதானது என் செவியில் நாராசத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப்போல் இருக்கிறதால் தயவு செய்து இனிமேல் அத்தகைய வார்த் தைகளைச் சொல்லாதே. உன்னே அக்கிரமமாக இவ்விடத் தில் அடைத்திருக்கிறார்களே! இதிலிருந்து தப்புவதற்கு ஏற்பாடு செய்திருக்கிருயா?

கோபாலன் வக்கீல் துரைசாமி ஐயங்காரவர்கள், பேர்ப்பட்ட சங்கதிகளைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ந்த துப்பறியும் கோவிந்தன் என்பவரைச் சென்னையி அழைத்துக்கொண்டு வந்தார். நான் இதுவரை ம் அவருடைய சாமர்த்தியத்தை நேரில் அறியாவிட் அவரைப் பார்த்தது முதல் வாஸ்தவத்திற் காலே செய்தவர்களே அவர் கட்டாயமாய்க் கண்டுபிடித்து விடுவாரென்ற எண்ணம்மட்டும் . எனக்குப் பூராவாய் இருக்கிறது. அவர் கண்டுபிடிக்கும் வரையில் இந்தப் பாழும் இடத்தில் இருந்து தொலையவேண்டியதுதான்.

லோகசுந்தரி : கோபாலா ! உனக்கென்ன புத்தி வரவர இப்படியாகிறது? சாமிநாத சாஸ்திரிகளும் துரை ஐயங்காரவர்களும் நானுந்தான் நீ ராஜாம்பாளைக் கொலே செய்யவில்லையென்று நம்புகிருேம். மற்ற யாரைக் கேட்டாலும் என்ன சொல்லுகிரு.ர்கள் ? கட்டாயமாய் நீ கொலை செய்திருப்பாயென்றுதான் சொல்லுகிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன? உன்னுடைய கழுத்துக்குச் சரியாய்க் கயிறு கொண்டுவரு வதற்கு எவ்வளவு சாட்சியங்கள் தேவையோ, அவ்வளவு

காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/132&oldid=684674" இலிருந்து மீள்விக்கப்பட்டது