பக்கம்:ராஜாம்பாள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 3? இராஜாம்பாள்

தோன்றி இதுவரையில் எத்தனை அரசர்கள் இறந்திருக்இ ரூர்கள்? இனி எத்தனை அரசர்கள் இறக்கப் போகிரும் கள்? அப்படியெல்லாம் இருக்க இறந்துபோன ராஜா, பாளைக் குறித்து நீ துக்கிப்பதில் பயன் என்ன? .

கோபாலன்: ல்ோகசுந்தரி, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப் போல் ராணிக்கு ராணியின் பிள்ளை சிலாக்கியமானல் அன்றன்றைச் சாறு பாட்டிற்குக்கூடக் கதியில்லாதவர்களுக்கும் அவர்களு டைய பிள்ளைகள் சிலாக்கியந்தான். இனி ராஜாம் பாளைப் போல் நற்குண நற்செய்கைகளையும் ரூபலா வண்யத்தையுமுடைய பெண் அகப்படுவது துர்லபமானது யால் என் பிராணனை வைத்துக்கொண் டிருப்பதில் பிர யோஜனம் இல்லை. -

லோகசுந்தரி கோபாலா, போன முயல் பெரிய முயல் என்று சொல்வது சகஜந்தான். வாஸ்தவமாகவே ராஜாம்பாள் சிலாக்கியமான பெண்ணென்றே வைத்துக் கொள்வோம். இறந்துபோனவள் மறுபடியும் எழுந்து வரப் போகிறதில்லையே! அப்படி யிருக்க அவளைக் குறித்து இனி ஏன் நினைக்கிறாய்? அவள் இறந்துபோனதால் நானும் இறந்துபோகிறேன் என்கிருயே. தற்கொலை செய்துகொள்வது மகா டாவமென்று வேதங்கள் கூற வில்லையா? சகல சாஸ்திர விற்பன்னளுகிய நீ இப்படிப் பேசுவது அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது. - கோபாலன்: வாஸ்தவந்தான்; தற்கொலே புரிவது பாவந்தான். நான் இறந்துபோவதே சிலாக்கியமென்று சொன்னதில் அர்த்தம் என்னவென்றால், இல்லறத்தி விருந்து இறந்துபோகிறேன் என்றேன். அதாவது சந்நி யாசியாகிறேன் என்றேனே தவிரத் தற்கொலை செய்து கொள்ளுகிறேனென்று சொல்லவில்லை. .

லோகசுந்தரி: வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாத வனும் திக்கற்றவனும் சர்க்காருக்கு விரோதமாய் நடந்து அதனுல் தன் ரூபத்தை மாற்றி வேறு ரூபமாகக் காட்ட வேண்டுமென்று மாறு வேஷம் பூண்டு அலைகிறவனும், தன் பெண்சாதியின் துர்க்குணத்தைக் கண்டு அதனல் வெறுப்படைந்து வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/136&oldid=684678" இலிருந்து மீள்விக்கப்பட்டது