பக்கம்:ராஜாம்பாள்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி 133.

னும் இன்னும் வேறு விதமாகத் திருப்தி அடையாதவர் களும் சந்நியாசிகளாகிறது இப்போதைய வழக்கமா யிருக்கிறது. எவன் ஒருவன் பரப்பிரம்ம சொருபமா யிருக்கும் சாட்சாத் ஜகதீசனுடைய பாதாரவிந்தங் களுக்குப் பாத்திரனுக வேண்டுமென்னும் எண்ணத்துடன் திரிகரண சுத்தியாய் இல்லறத்தைத் துறந்து சந்நியாசம் பெற்றுக்கொண்டு ஒரு வேளைச் சாப்பாடு மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு, ‘மண்ணுசை, பெண்ணுசை, பொன்னசை என்ற மூன்றா சைகளையும் வேருடன் கரு வறுத்துவிட்டு, ஒரே மனதாய்க் கடவுளைத் தியான ஞ் செய்துகொண் டிருக்கிருனே அவனுக்கல்லவா நித்தியத் துவம் அகப்படும்? அப்படியில்லாமல், என் ஆசைக் கண்மணியாகிய ராஜாம்பாள் இறந்து விட்டாளே” என்ற ஏக்கத்தால் நீ சதா அவளுடைய நாம ஸ்மரணையே செய்துகொண்டு காவி வஸ்திரம் உடுத்துக்கொண்டு சந்நியாசியாவதனால் வரும் பலன் ரவுரவாதி நரகந்தான் என்பதை நீ அறியவில்லேபோல் இருக்கிறது. இந்த ஊரில் உன்னைப்போல் சாஸ்திரங்களில் தேர்ந்தவர்கள் இல்லையென்று எல்லாரும் சொல்லிக்கொள்ளுகிறார்களே! இங்கிலீஷ் படிக்க ஆரம்பித்துவிட்டால் சாஸ்திரங்களே புரட்டுகளென்று அதைப் படிக்காது விட்டுவிடுவது சகஜமாயிருந்தாலும் நீ மாத்திரம் அப்படிச் செய்யாமல் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானம், மனுதர்ம சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்களை யெல்லாம் ஒன்று விடாமல் படித்தாயே. படித்தவர்களைப் பார்க்கிலும் படியாத முட்டாள் வண்ணுன் சிலாக்கிய மென்று தெலுங்கு பாஷையில் ஒரு வழக்குச் சொல் உண்டு. அந்தப் பழமொழியை உன்னிடத்தில்தான் கண்டேன். அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழும் என்பதைப்போல் நீ சகல சாஸ்திரங்களையும் படித் ததனுல்தான் இப்படிப் பேசுகிறாய்போல் இருக்கிறது. என்னிடம் சொல்வதைப்போல் இவ்வார்த்தையை இனி யாரிடமும் சொல்லாதே; சிரிக்கப்போகிறார்கள். .

கோபாலன்: நீ சொல்லுவதெல்லாம் வாஸ்தவ ந் தான். நான் இனி இறப்பதும் இல்லை; துறப்பதும் இல்லை; இனி எனக்குச் சந்தோஷமும் இல்லை; துக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/137&oldid=684679" இருந்து மீள்விக்கப்பட்டது