பக்கம்:ராஜாம்பாள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராஜாம்பாள்

இல்லை; ஆதலால் ஏழைகளுக்கு ஒத்தாசை செய்து கொண்டு என் காலத்தைக் கழிக்கிறேன்:

லோகசுந்தரி: நீ சிறு குழந்தை முதலே ராஜாம் பாளையும் என்னையும் நேசித்து எங்களுக்கு வேண்டி, புத்திமதிகளைச் சொல்விக்கொடுத்து வந்தாய். நாம் மூவரும், மூன்று உடலும் ஓர் உயிரும் போல ஒருவரை ஒருவர் நேசித்து வந்தோம். தெய்வாதீனமாய் ராஜாம்பாள் இறந்து போளுள். ஆகையால் மூவரில் இப்போது உயி ருடன் இருக்கும் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித் துப் பாலும் நீரும் போலவும், அன்னமும் பேடையும் போல வும், மூவர்களாலும் தேவர்களாலும் ரிஷிகளாலும் முனிகளாலும் விலக்க முடியாத போகங்களை அநுபவித் துக்கொண் டிருப்பதை விட்டுவிட்டு, பட்டினி கிடக்கிறே னென்றும், ஏழைகளுக்கு ஒத்தாசை செய்கிறேனென் றும் பைத்தியக்காரன் உளறுவதைப்போல் உளறுகிருயே! சகல போகங்களையும் அநுபவித்துக்கொண்டு நாம் இரு வரும் தர்மஞ் செய்வது எவ்வளவு சிலாக்கியமாகும் எனக்கு இருக்கும் சொத்து முழுவதையும் தர்மஞ் செய்கி) றேன். என்னைப்போல் அழகுள்ள பெண் கிடையா ளென்று உன் வாயாலேயே சொல்லியிருக்கிறாய்; என் னைப் பார்த்த புருஷர்கள் இச்சைப்படாமல் இருக்க மாட் டார்களென்றும் சொல்லியிருக்கிறாய். நான் நன்றாய்ப் படித்திருக்கிறேன். எப்போது உனக்கு வாசிக்க முடிய வில்லையோ அப்போது உன் பக்கத்திலிருந்து நான் வாசிப் டேன். எப்போது உனக்குத் தூக்கம் பிடிக்கவில்லையோ, அப்போது வாயால் பாடி உன்னைச் சந்தோஷிப்பிக்கக் கூடிய இனிய குரல் அடைந்திருக்கிறேன். அதுவும் போதாதென்றால் வீணையையும் பிட்டிலேயும் வைத்துக் கொண்டு பாடுவேன். ஆகையால் ராஜாம்பாளைவிட எந்த விஷயத்தில் நான் குறைவாயிருக்கிறேன்? இல்லை; அப்படியே குறைவென்றே வைத்துக்கொள்வோம். இப்போது ராஜாம்பாள் இறந்து போய்விட்டபடியால் இனி என்னைப்போல் சகல குணங்களும் பொருந்திய பெண் உனக்கு அகப்படுவது கஷ்டந்தான். எனக்கு உன்மேல் இருக்கப்பட்ட பிரியம் இவ்வளவு அவ்வள. வென்று சொல்ல முடியாது. ஆகையால் உன் வாயால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/138&oldid=684680" இலிருந்து மீள்விக்கப்பட்டது