பக்கம்:ராஜாம்பாள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி 135.

என்னைக் கல்யாணஞ் செய்துகொள்ளுகிறேனென்று சொல்லு.

கோபாலன்: என்னுடைய இருதயத்தை ராஜாம் பாளுக்கு ஒப்பித்துவிட்டேன். இனி எப்படி வேறொரு வருக்கு ஒப்பிக்க முடியும்? முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிருயே!

லோகசுந்தரி: உன்னுடைய இருதயத்தை ராஜாம் பாளுக்கு ஒப்பித்துவிட்டதைக் குறித்து எனக்குக் கஷ்டம் இல்லை என்மேல் இப்போது பிரியம் இல்லா விட்டாலும், நீ என்னைக் கல்யாணஞ் செய்துகொன்ல தாக ஒப்புக்கொண்டால் மூன்று நாட்களில் எப்படி யாவது என்மேல் பிரியம் உண்டாகும்படி செய்து விடுகிறேன் பார். அப்படிச் செய்யாவிட்டால் நீ என்னைக் கல்யாணஞ் செய்துகொள்ள வேண்டாம். லோகத்திலுள்ள இன்பங்களை உணராமல் பித்தனைப்போல் பிதற்றுகிருவே: அவ்வளவு திடச்சித்தம் உள்ள ராஜரிஷியாகிய விசுவா. மித்திரராலேயே பெண்ணின் இன்பத்திலிருந்து மீள முடியவில்லையே! அப்படி இருக்க வைராக்கியமே இன்னதென்று அறியாத உன்னல் அந்த இன்பத்தி லிருந்து எப்படி மீள முடியும்? இன்னும் மன்மதன் அவனுடைய புஷ்ப பாணங்களே உன்மேல் வருவிக்க வில்லைபோல் இருக்கிறது. பாவி மன்மதன் ஏன் என்னே இப்படி இம்சிக்கிருனே தெரியவில்லையே! கோபாலா, பகலிலும் இரவிலும் நனவிலும் கனவிலும் சதா என் முன்னலேயே நீ நிற்கிருயே! என்மேல் உனக்குப் பிரியம் இல்லாவிட்டால் எப்படி உன் உருவம் எனக்குத் தோன் றும்? வாஸ்தவமாக என்னைச் சோதிக்கிருப்போல் இருக் கிறது. இனியாகிலும் என்னைச் சோதனை செய்யாமல் தயவு கூர்ந்து என்னைக் கல்யாணஞ் செய்துகொள்ை தாக வாக்களி. நீ தாமதம் செய்யும் ஒவ்வொரு விநாடி யும் எனக்கு ஒவ்வொரு யுகமாயிருக்கிறதே! புருஷை ஒருபெண் இப்படி வேண்டிக்கொள்வது கேவலமாயிருந்தா லும் எனக்கு உன்மேல் இருக்கும் அளவிட முடியாத பிரிய மானது பெண்களுடைய கெளரவத்தைக் குறைத்து உன்னே இப்படியெல்லாம் வேண்டிக்கொள்ளும்படி செய் கிறது. பூலோகந் தோன்றின நாள் முதல் எந்த ஸ்திரீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/139&oldid=684681" இலிருந்து மீள்விக்கப்பட்டது