பக்கம்:ராஜாம்பாள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாம்பாள்

i.

3

8

லோகசுந்தரி: என்னைக் கல்யாணஞ் செய்துகொள் வதாக ஒப்புக்கொண்டால் மட்டும் கொலைசெய்தவனத் தண்டித்து, உன்னைச் சிறையிலிருந்து மீட்பேன்; இல்ல விட்டால் சும்மா இருந்துவிடுவேன். -

கோபாலன்: நீ மீட்டாலும் சரி; மீட்காவிட்டா லும் சரி: உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்.

லோகசுந்தரி: ஆளுல் நீ என்னை விரோதிக்கிறாய்? கோபாலன்: நீ அப்படி எண்ணிக்கொண்டால் அதை யாரால் தடுக்க முடியும் ? என்னுடைய வாஸ்தவமான அபிப்பிராயத்தை வெளியிட்டதால் நீ ஏன் என்ன விரோதியாகப் பாவிக்கவேண்டும் என்பது எனக்குப் புலப் படவில்லை.

லோகசுந்தரி: பெண்கள் எப்போது வலிய வந்து கல்யாணம் பண்ணிக்கொள்ளும்படி கேட்கிறார்களோ அப்போது அவர்களே மறுக்கக்கூடாதென்று சாஸ்திரம் கூறுகிறதே! அப்படி இருக்க, ஒரு முறைக்கு நான்கு முறை நான் வலிய வந்து, என்னைக் கல்யாணஞ் செய்து கொள்ளும்படி உன்னைக் கெஞ்சிக் கேட்டும், நீ நிஷ்காரண மாக என்னைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டே னென்றால், எனது மனம் எவ்வளவு வருத்தப்படும் என் பதைச் சற்று ஆலோசனை செய்தாயா? அவ்வளவு வருத்தம் அடையும்போது இஷ்டம் உண்டாகுமா? விரோதம் உண்டாகுமா? உனக்கு இன்னும் பூலோகத் தினுடைய அதுபோகம் போதாததால் நன்மை இன்ன தென்றும் தீமை இன்னதென்றும் நீ அறியவில்லை. பெண் கள் விரும்பிய புருஷர் பெண்களின் இஷ்டத்தின்படி நடக்காவிட்டால் அதனுல் எவ்வளவு கேடு விளையும் என்பதை நீ இதுவரையில் பார்த்ததும் இல்லே, கேட்டதும் இல்லைபோல் இருக்கிறது. ஆசைப்பட்ட புருஷர்மீது, முன்னுல் எவ்வளவு பிரியம் இருந்ததோ அவ்வளவிற்கு ஆயிரம் பங்கு அதிகமாக விரோதம் ஏற்படுவது சகஜந்’ தான். நான் விரும்புகிறபடி நீ என்னைக் கல்யாணஞ் செய்துகொண்டால் ராஜாம்பாளைக் கொலை செய்தவனைக் கண்டுபிடிப்பது ஒன்று நீ சிறையிலிருந்து குற்றவாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/142&oldid=684684" இருந்து மீள்விக்கப்பட்டது