பக்கம்:ராஜாம்பாள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி 3

பல்லவென்று ருஜ"ப்படுத்தப்பட்டு, பழைய மரியாதையை அடைவது இரண்டு; என்னுடைய சொத்துப் பூராவை யும் அடைவது மூன்று; மிதனும் ரதியும்போல் நாம் இன்ப சுகங்களே அநுபவிப்பது நான்கு ஆகிய இவ்வித நன்மைகளே அடைவாய். என் இஷ்டப்படி நடக்காவிட் டால் உன் அருமைக் கண்மணியாகிய ராஜாம்பாளை நீ கொலைசெய்ததாக ருஜுப்படுத்தப்பட்டு, மகா பாவி என்று எல்லோராலும் துாற்றப்பட்டு, தூக்கிற் போட் டுக் கொல்லப்படுவதால் மறுமையிலும் ரவுரவாதி நரகத்திற் போய்ச் சேருவாய். இவ்விரண்டில் எது செய்வது நன்மையென்றும், எது செய்வது தீமையென் றும் நன்றா ய் யோசனை செய்து பதில் சொல்.

கோபாலன்: எப்படி ஆலுைம் சரிதான். உன்னைக் கல்யாணஞ் செய்துகொள்ளமாட்டேன்; இது சத்தியம்.

லோகசுந்தரி. நல்லது, கோபாலா! நீ இப்படிச் சொன்னதற்காக உன்னைப் போதுமானபடி கஷ்டங்களை அநுபவிக்கும்படி செய்யாவிட்டால் என் பேர் லோகசுந் தரியும் அல்ல; நான் எடுத்தது பெண் ஜன்மமும் அல்ல. இந்த நிமிஷம் முதல் என்னை விரோதியாக நினைத் துக்கொள்.

லோகசுந்தரி அதிகக் கோபத்துடன் எழுந்துபோய்விட் டாள். கோபாலனும் அதுவரையில், அவளைத் தன் தங்கை யாகப் பாவித்து அவளுக்கு வேண்டிய நற்புத்திகளைப் புகட்டி வந்தவனதலாலும், இயற்கையிலேயே பிறருடைய துர்க்குணங்களே நினையாமல் அவர்களால் தான் அடைந்த நன்மைகளை மட்டும் நினைப்பவனதலாலும், லோகசுந்தரிக்குக் கோபம் வரும்படியாகத் தான் நடக்கும்படி நேரிட்டதே என்று வருத்தப்பட்டுக்கொண் டிருந்தான். - .

சென்னைக்குப் போன துரைசாமி ஐயங்கார், சாமி நாத சாஸ்திரிகளுக்கு வாக்களித்த பிரகாரம், நடேசனைக் கண்டு உயிலே ரத்துப்பண்ணின சங்கதியை அவனுக்குச் சொல்லி, அதல்ை அவன் வருத்தம் அடையாதபடி சமத் காரமாய், உயிலை ரத்துச் செய்ததே நலமென்று காட்டிப் போனார். “ ... • , -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/143&oldid=684685" இருந்து மீள்விக்கப்பட்டது