பக்கம்:ராஜாம்பாள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தாய்க்கிழவி

இராஜாம்பாளின் கல்யாணத்திற்குப் போய் இரண்டு நாட்களில் வந்துவிடுவதாகத் தாசி பாலாம்பாளிடம் நடேச சாஸ்திரிகள் சொல்லிவிட்டுப் போனவர், சொன்ன படி வர முடியாமல் அசந்தர்ப்பப் பட்டுப் போய் ஐந்து நாட்கள் ஆகிவிட்ட படியால் அவள் கோபித்துக்கொள்ளு வாளென்று அவளேத் திருப்தி செய்வதற்காகக் குஷால் தாஸ் கடைக்குப் போய் ஆயிர ரூபாயில் மத்தாப்புச் சேலையும் ரவிக்கையும் வாங்கிக்கொண்டு பாலாம்பாள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தார். தாய்க் கிழவி மாத்திரம் ஒரு பக்கத்தில் விசனமாக உட்கார்ந்துகொண் டிருந்தாள்; பாலாம்பாளைக் காணவில்லை.

நடேச சாஸ்திரி: பங்கஜம்! பாலாம்பாள் எங்கே?

தாய்க்கிழவி: தாங்கள் வருவீர்களென்று முந்தாநாள் ராத்திரி பன்னிரண்டு மணிவரையில், நான் எவ்வளவு சமாதானம் சொன்னபோதிலும் கேட்காமல் உட்கார்ந் திருந்தாள். தள்ளர்த காலமாதலால் நான் கண் உறங்கி விட்டேன். காலேயில் எழுந்து பார்க்கையில் அவளைக் காணுேம். படுக்கையிலும் படுக்கவில்லை. ஒரு கால் தங்கள் பேரில் இருக்கும் பிரியத்தால் தங்களைத் தேடிக்கொண்டு காஞ்சீபுரம் போயிருப்பாளென்று நினைத்துக்கொண் டிருந்தேன் . இப்போது தாங்கள் என்னைக் கேட்கிறது ஆச்சரியமாயிருக்கிறதே தள்ளாத காலத்தில் தாங்களும் அவளும் சேர்ந்துகொண்டு என்னைச் சோதனை செய் வது சரியல்ல; தயவு செய்து என் கண்மணி எங்கே என்று சொல்லுங்கள். • *

நடேச சாஸ்திரி வாஸ்தவமாக நான் பார்க்கவில்லை, நீயும் அவளும் சேர்ந்துகொண்டு என்மேல் இருக்கும் கோபத்தால் என்னைத் தண்டிப்பதற்குப் பதிலாக இப்படிப் பகடி செய்ய உத்தேசித்தீர்கள் போல் இருக் கிறது. போதும் இந்த விளையாட்டு; அவளைக் காணுமல் என் கண்கள் பூத்துப்போயின; அவள் எங்கே இருக்கிருள்?

நடேச சாஸ்திரிகள்.இப்படிக் கேட்டவுடனே தாய்க்

கிழவி ஓவென்று ஒப்பாரி வைத்து அழத் தொடங்கிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/144&oldid=684686" இலிருந்து மீள்விக்கப்பட்டது