பக்கம்:ராஜாம்பாள்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்க்கிழவி 141

அவளை நடேச சாஸ்திரிகள் தம்மால் ஆனவரையில் சமா தானப்படுத்திக் கேட்டும் முன் சொன்னபடியே சொல்வி அழுதாளேதவிர, வேறே ஒன்றும் சொல்லவில்லை. அப்பால் யோசனை செய்து இனிச் சும்மா இருப்பதில் காரியம் இல்லை என்று தெரிந்து, திருவல்லிக்கேணிக் கோவிந்தனை அழைத்துத் தேடச் சொல்லவேண்டுமென்ற எண்ணத் துடன் வண்டியில் ஏறி அவர் வீட்டிற்குப் போய்த் தம் பேர் எழுதிய சீட்டை அனுப்பினர். கோவிந்தன் உள்ளே உட்கார்ந்தபடியே சாஸ்திரிகளை அழைத்து வரும்படி சொல்லி, அவர் வந்தவுடனே, என்ன விசேஷம் என்று கேட்டார். . . - . . . - * . . . . .

நடேச சாஸ்திரி: முந்தாநாள் ராத்திரி முதல் தாசி பாலர்ம்பாளேக் காணுேம்; அவளுக்கு அபாயம் நேரிட் டிருக்குமென்று அவள் தாய் சந்தேகப்படுகிருள். தாங் கள் எப்படியாவது விரைவில் அவள் எங்கே போளுள் என் றும் அல்லது என்ன அபாயத்திற்கு உட்பட்டிருக்கிரு ளென்றும் கண்டறிய வேண்டும். அதனல் என்ன செலவு நேரிட்டபோதிலும் நான் கொடுக்கச் சித்தமாயிருக் கிறேன். இதோ இந்த ஐந்நூறு ரூபாயை முன்பணமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கோவிந்தன்: நான் கண்டுபிடித்தால் மட்டும் ரூபாய் வாங்குவதே தவிர அதற்கு முன்னுல் வாங்குவதில்லை. தாங் கள் இன்னரென்றும், தங்களுடைய யோக்கியதை இன்னது என்றும் நன்கு உணர்ந்த நான் தங்களிடம் முன்னல் ரூபாய் வாங்கமாட்டேன். நான் கண்டுபிடிக்க வேண் டும் என்ற அபிப்பிராயம் தங்களுக்கு இருந்தால் நான் கண்டுபிடிக்கும் வரையில் என்னைத் தொந்தரவு செய்யா மல் என் போக்கின்படி விடவேண்டும்; உயிருடன் இருந் தால் எங்கே இருக்கிருளென்றும், வியாதியால் இறந் திருந்தால் எங்கே இறந்தாளென்றும், என்ன வியாதி யால் இறந்தாளென்றும், கொலை செய்யப்பட்டிருந்தால் யார் கொலை செய்தார்களென்றும் கண்டு பிடிக்கும் வரை யிலும், என்னை எந்த விதமான கேள்விகளும் தாங்கள் கேட்கிறதில்லையென்று ஒப்புக்கொள்ள இஷ்டம் இருந் தால்தான் என்னுல் கண்டு. பிடிக்க முடியும்; இல்லாவிட் டால் தாங்கள் வேறொருவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/145&oldid=684687" இருந்து மீள்விக்கப்பட்டது