பக்கம்:ராஜாம்பாள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.14% இராஜாம்பாள்

நடேச சாஸ்திரி: எப்படியாவது விரைவாகக் கண்டு பிடியுங்கள். த்ாங்களாகச் சொல்லும்வரையில் நான் தங்களைக் கேட்பதில்லை.

உடனே சாஸ்திரிகளும் கோவிந்தனும் புறப்பட்டுத் தாசி பாலாம்பாள் வீட்டிற்குச் சென்றார்கள். (கோபால னிடம் இராஜாம்பாளைக் கொலை செய்தவர்களைக் கண்டு பிடிக்கும் வரையில் வேறு வேலை செய்வதில்லை என்று கோவிந்தன் வாக்களித்திருந்தும் இதைக் கண்டு பிடிக்க ஒப்புக்கொண்டது சரியா என்று இதை வாசிப்போ: தினக்கலாம். கோவிந்தன் ஒருவருக்கு ஒரு வாக்களித் தால் அப்பால் தவறுவது இல்லையாதலால், இதைக் கண்டுபிடிக்க ஒப்புக்கொண்டது நியாயமா, நியாய மல்லவா என்பது கடைசியில் விளங்கும்.) அங்கே போன தும் தாய்க்கிழவி பங்கஜமும் நடேச சாஸ்திரிகள் சொன் னது போலவே சொன்னுள். உடனே கோவிந்தன் நடேச சாஸ்திரிகளைத் தபாலாபீசுக்கு அனுப்பி ஒருகால் காஞ்சி புரத்திற்குப் பாலாம்பாள் வந்திருக்கிருளா என்று நண் பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்குத் தந்தி கொடுத்து ஜவாப்புப் பெற்று வரும்படி சொல்லி அனுப்பி விட்டார்.

கோவிந்தன்: பங்கஜம், வாஸ்தவமாகப் பாலாம் பாள் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டுமென்ற அபிப் இராயம் உனக்கு இருந்தால் என்னிடம் நீ உண்மை இசல்லவேண்டும். உண்மை சொல்லாவிட்டால் என் குல் கண்டுபிடிப்பது கஷ்டமாகும்.

தாய்க்கிழவி: நான் அப்போதே உண்மை சொல்லி விட்டேன். இன்னும் என்ன உண்மை சொல்லச் சொல்லு கிறீர்கள்?

கோவிந்தன். நடேசனை ஏமாற்றினதுபோல என்ன்ை யும் ஏமாற்ற நினைத்தாய்போல் இருக்கிறது. நல்லது: தி சொன்னது பொய்யென்று உனக்கு ரூபித்துவிட்டு நான் விட்டிற்குப் போகிறேன். முந்தாநாள் ராத்திரி முதல் பாலர்ம்பாளைக் காளுேம் என்றாயே: அது முழுப்பொய்: ஜனவரி 26வ புதன்கிழமை ராத்திரி முதல் பாலாம் பள்ளைக் காணுேம் என்று சொல்லு, :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/146&oldid=684688" இலிருந்து மீள்விக்கப்பட்டது