பக்கம்:ராஜாம்பாள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்க்கிழவி 143

இவ்வாறு கோவிந்தன் சொன்னவுடனே தாய்க்கிழவி எழுந்து ஓடிவந்து, கோவிந்தனுடைய கால்கள் இரண் டையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தான் பொய் சொன்னதற்காகத் தன்னை மன்னித்துத் தன் ஆசைக் கண் மணியாகிய பாலாம்பாள் எங்கே இருக்கிருளென்று சொல்ல வேண்டுமென்றும், பாலாம்பாள் புறப்பட்டுப் போன நேரத்தைச் சரியாய்க் கோவிந்தன் சொன்ன படியால் அப்போது அவள் எங்கே இருக்கிருளென்பதும் அவருக்குத் தெரியுமென்றும், தன்னைச் சந்தேகத்தில் வைப்பது சரியல்லவென்றும் தர்மமல்லவென்றும் கெஞ்சிக் கேட்டாள். - . . . :

கோவிந்தன்: நான் உண்மையைச் சொல்லச் சொன் ஒல், சொல்லாமல் ஒளித்ததஞல் என்னுல் கண்டுபிடிக்க முடியாது. நீ இப்படியே ஒவ்வொன்றிலும் பொய் சொல்லுவாய். நான் கஷ்டப்பட்டும் உபகாரம் இல்லாமற். போகும். ஆகையால் நான் போகிறேன்.

தாய்க்கிழவி: ஐயா! தாங்கள் அப்படிக் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஒன்றும் விடாமல் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நான் சொல்வது உண்மைதான் என்று உங்கள் தலையில் வேண்டுமானலும் அடிக்கிறேன். கோவிந்தன்: நீ என் தலையில் அடித்துப் பொய்ச் சத்தியம் செய்தால் அதனுல் எனக்குத்தானே கெடுதி ? உன் வீட்டிற்கு வரும் முட்டாள்களைப் பேச்சுச் சாமர்த்தி யத்தால் ஏமாற்றுவதுபோல் என்னையும் ஏமாற்ற நினைக் காதே; இன்னொரு தரம்மட்டும் நீ பொய் சொல்வதாக எனக்குத் தோன்றில்ை உடனே நான் எழுந்து போய் விடுவேன். நடேச சாஸ்திரியின் எதிரில் உண்மை சொல்ல மாட்டாய் என்றுதான் அவரை அனுப்பிவிட்டேன். அவர் திரும்பி வருவதற்குள் சொல்ல வேண்டியவைகளை யெல் லாம் ஜல்தியாய் ஒளியாமற் சொல்லிவிடு. -

தாய்க்கிழவி நான் ஒன்றும் விடாமல் சொல்லிவிடு கிறேன். தாங்கள் தயவு செய்து சாஸ்திரிகளிடம் சொல் லக்கூடாது. .”

கோவிந்தன்: இல்லை; வாஸ்தவத்தைச் சொல். தாய்க்கிழவி: மூன்று வாரங்களுக்கு முன்னல் பாலாம் பாளும். நடேசனும் சோபாவில் உட்கார்ந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/147&oldid=684689" இலிருந்து மீள்விக்கப்பட்டது