பக்கம்:ராஜாம்பாள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 இராஜாம்பாள்

சதுரங்கம் ஆடிக்கொண் டிருந்தார்கள். அப்போது எங் கேயோ இருந்து அவசரமான தந்தி வந்ததென்று நடேச சாஸ்திரியின் வேலைக்காரன் கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்தவுடனே அவர் ஜேப்பில் வைத்துக் கொண்டார். பாலாம்பாள் ஆனவரையில் என்ன சமா சார மென்று கேட்டும் அதுவரையில் அவளிடம் எவ்வித ரகசியங்களையும் ஒளியாமல் சொல்லிவந்த சாஸ்திரி, அன்று சரியான ஜவாப்புச் சொல்லாமல் ஏதோ அவசர மான வேலை இருப்பதாகவும் அதனல் அன்றிரவு வர முடியாதென்றும் சொல்விப்போனார், அது என்ன சமாசார மென்று கண்டறியும் வரையில் தாகத்திற்கு ஜலங்கூடச் சாப்பிடமாட்டேன் என்று பாலாம்பாள் சொல்லிக் கொண்டிருந்ததால், நான் ஒரு யுக்தி செய்து, வந்த தந்தியை வேலேக்காரன் வைத்திருந்ததாகவும் அதை நாய் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டதாகவும், தந்தியில் என்ன சமாசாரம் இருந்ததென்று நடேச சாஸ்திரிகள் கேட்டனுப்பினதுபோலவும் தந்தி ஆபீசுக்கு ஆள் அனுப்பிச் சமாசாரம் தெரிந்துகொண்டேன். அதாவது காஞ்சீபுரம் லோகசுந்தரி, நடேசனை மாறுவேடம் பூண்டு து ராத் திரி பத்துமணிக்கு வரச் சொல்லி எழுதியிருந்

: :


இதைக் கேட்டவுடனே பாலாம்பாள் தானும் காஞ்சீபுரம் போய் அவர்கள் என்ன பேசுகிறார்களென்று கண்டறிந்து வருவதாய்ச் சொல்லி ஆண்வேடம் பூண்டு நடேச சாஸ்திரிகள் போன ரெயிலிலேயே போனுள் மறு நாள் காலையில் வந்ததும் ராஜாம்பாளுக்கும் கோபாலனுக் கும் கல்யாணம் நடக்கப்போவதாகவும், அதை நடேசனும் லோகசுந்தரியும் சேர்ந்து எப்படியாவது தடுக்கவேண்டு மென்று ஏற்பாடு செய்வதாகவும் சொன்னாள். மறுபடியும் நடேசன் போகும்போது தானும் போய் எப்படியாவது ராஜாம்பாளுக்கும் கோபாலனுக்கும் கல்யாணம் நடக்கும் படி செய்யப் போவதாகவும், நடேசனும் லோகசுந்தரியும் செய்யும் ஏற்பாடுகளைக் கெடுக்கப்போவதாகவுஞ் சொன் ள்ை. யார் எப்படிப் போனல் என்னவென்று என்னுல் கூடியவரையிற் சொல்லியும் கேள்ாமல் 26வ. புதன்கிழமை சாயங்காலம் ஆறுமணி ரெயிலில் பாலாம்பாள் போளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/148&oldid=684690" இருந்து மீள்விக்கப்பட்டது