பக்கம்:ராஜாம்பாள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4G இராஜாம்பர்ள்.

கேட்டதற்கு யாரும் வரவில்லையென்று சொல்லுகி மூர்கள். நான் அவளேப் பார்த்து நான்கு வருஷங்கள்

லோகசுந்தரி, காஞ்சீபுரம்.

கோவித்தன், கூடிய விரைவில் கண்டுபிடித்து வந்து சொல்லுவதாகச் சொல்லி, நடேச சாஸ்திரிகளிடம் விடை, பெற்றுக்கொண்டு போய்ப் பாலாம்பாளை இதுவரையில் யார் குத்தகையாக வைத்துக்கொண் டிருந்தார்களென்று விசாரித்ததில் பின்வரும் சமாசாரங்களைக் கண்டுபிடித் தார். - - -

காஞ்சீபுரம் லோகசுந்தரியின் காலஞ்சென்ற புருஷ ராகிய சீதாராம சாஸ்திரிகள்தாம் பாலாம்பாளைப் புதுச் சோபனம் செய்தாரென்றும், அதுமுதல் சாப்பிடும் வேளை தவிர மற்ற வேளைகளிலெல்லாம் அவளுடைய வீட்டை விட்டு அப்பாற் போவதில்லையென்றும், டாலாம் பாளுக்குத் திருப்தியாகும்படி நகைகள் செய்து போட்டதல் லாமல், அவள் கேட்ட சாமான்களையெல்லாம் யாதொரு அட்டியுமில்லாமல் வாங்கிக்கொடுத்ததாகவும், அப்பால் திடீரென்று அவர் வாந்தி பேதியால் இறந்து போய்விட் டாரென்றும் தெரியவந்தது. அவர் காலஞ்சென்ற பிற். பாடு இரண்டொரு மாசம் பாலாம்பாள் விசனமாக இருந்ததாகவும், அப்பால் சென்னைத் தலைப்பாகை மாற்றி ஜகப்புரட்டுக் கம்பெனியின் முதல் துபாஷாகிய பாஷிய காரலு நாயுடு அவர்களின் ஏகபுத்திரராகிய ஷோக் நரசிம் மலு நாயுடு அவர்கள் பாலாம்பாளை இரண்டு வருஷ கால மாய் வைத்துக்கொண் டிருந்ததாகவும், அதில் ஒரு வரு ஆத்திற்குள் அவருக்கிருந்த பிதிரார்ஜித சொத்தெல்லாம் செலவாகிவிடவே, க. மு. அ. ப. ர. ந. சி. வ. அப்பாவு செட்டியாரவர்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன்வாங்கிச் செலவு செய்தாரென்றும், செட்டியாருக்குப் பணம் சேராததால் கோர்ட்டில் ஷோக் நரசிம்மலுநாயுடுவின் பேரில் கேஸ் போட்டு, தாசி பாலாம்பாளின் உதவியால் நரசிம்மலு நாயுடுவைக் கடன்காரர் ஜெயிலில் அடைத்து வைத்தார்களென்றும், ஷோக் நரசிம்மலு: நாயுடு ஜெயிலிலிருந்து விடுதலையாகி ஒரு மாத காலந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/150&oldid=684692" இலிருந்து மீள்விக்கப்பட்டது