பக்கம்:ராஜாம்பாள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இராஜாம்பாள்

ஆயுள்பரியந்தம் அவரை வைத்துக்கொண் டிருப்பாளென் பதையும் கோவிந்தன் விசாரணை செய்து அறிந்து கொன் டார். இதை அறிந்ததுமுதல் கோவிந்தன் என்ன செய்தா ரென்றும் எங்கே இருக்கிருரென்றும் இப்போது தெரிய வில்லை.

13. செஷன்ஸ் கோர்ட்டு

இகஷன்ஸ் கோர்ட்டில் இராஜாம்பாளின் கொலைக் கேஸ் விசாரணையாகப் போகிறதென்ற சங்கதி தெரிந்த வுடனே, பக்கத்துக் கிராமங்களில் உள்ள ஜனங்களெல் வாம் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூட்டங் கூட்டமாய் வந்து சேர்ந்தார்கள். காலை எட்டு மணிமுதல் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டபடியால் நியாயாதிபதி வந்து தம் ஸ்தான்த்தில் உட்காரும்போது சுமார் ஐம்பதினுயிரம் ஜனங்கள் கோர்ட்டிலும் கோர்ட்டைச் சுற்றிலும் இருக் கும் வெளிப்புறத்திலும் கூடியிருந்தார்கள். ஜூரர்களை இயல்லாம் கூப்பிட்டு அவர்களில் ஒன்பது பேர் ஜூரர்க ளாகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களும் அவர் களுக்கு ஏற்படுத்தியிருக்கும் இடங்களில் அமர்ந்தவுடனே, கோபாலனைக் கொண்டுவந்து நிறுத்தினர்கள். கவர்ன் மென்ட் தரப்பில் பாரிஸ்டர் கொக்கு துரையவர்களும், கோபாலனுக்காக வக்கீல் துரைசாமி ஐயங்காரவர்களும் வாதிப்பதற்காக வந்திருந்தார்கள். -

ஜட்ஜ் துரையவர்கள் கோபாலனைப் பார்த்து, நீ குற்றவாளியா? குற்றவாளியல்லவா?’ என்று கேட்ட தற்கு, கோபாலன், ‘குற்றவாளியல்ல’’ என்று பதில் சொன்னன். அப்பால் பாரிஸ்டர் கொக்குதுரை, மாஜி ஸ்டிரேட் கோர்ட்டில் கேஸ்ை எப்படி ஆரம்பித்தாரோ அப்படியே ஜூரர்களுக்கும் ஜட்ஜ்துரைக்கும் நன்றாய்ப் புலப்படும்படி அதைவிட ஜாஸ்தியாகக் கேசை ஆதிமுதல் அந்தம் வரையில் சவிஸ்தாரமாய்ச் சொல்லி முடித்தார். அப்பால் சாட்சிகளை விசாரிப்பதாகச் சொல்வி முதல் சாட்சியாகிய இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடுவைக் கூப்பிடச் சொன்னர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/152&oldid=684694" இலிருந்து மீள்விக்கப்பட்டது