பக்கம்:ராஜாம்பாள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு i5%

துரைசாமி ஐயங்கார்: அவர்கள் பாரா இருந்ததால் தாங்கள் போய்த் திரும்பி வரும் வரையில் அங்கே வேறே ஆட்கள் வர முடியாதே?

மணவாள நாயுடு: எப்படி வர முடியும்? எவரையும் உள்ளே விடக்கூடாதென்று கண்டிப்பாய்ச் சொல்வி யிருந்தேன். - துரைசாமி ஐயங்கார்; ஆனால் தாங்கள் போய்த் திரும்பி வந்த வரையில் அந்த இடத்திற்கு எவரும் வர வில்லை என்று தாங்கள் சத்தியம் பண்ண முடியுமா?

மணவாள நாயுடு; அந்தப் பாராக்காரர் வார்த்தை யை நம்புவதாயிருந்தால் எவரும் வரவில்லை யென்றே சொல்லவேண்டும்.

துரைசாமி ஐயங்கார்: கைக்குட்டையைச் சாம்பலுக் குள்ளிருந்து தாங்கள்தான எடுத்தீர்கள்? - மணவாள நாயுடு: கோவிந்தன் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அதை வாங்கிக்கொண்டேன்.

துரைசாமி ஐயங்கார்: கோவிந்தனை நீங்கள் அழைத் துக்கொண்டு போனிர்களோ? - *:: , , -

மணவாள நாயுடு; நான் அழைத்துப் போகவில்லை. நான் போவதற்கு முன்னலேயே தங்களோடு கோவிந்தன் வந்திருந்தார்.

துரைசாமி ஐயங்கார்; சற்று நேரத்திற்கு முன்பாக இரண்டு ஜவான்களைக் காவல் வைத்திருந்தீர்களென்றும், ஆகையால் எவரும் உள்ளே போயிருக்கமாட்டார்களென் றும் சொன்னீர்களே!

மணவாள நாயுடு; தாங்கள் வந்ததால், தங்களையும் கோவிந்தனையும் விட்டார்கள். தாங்கள் இரண்டு பேர் கள் தவிர வேறே எவரும் வந்திருக்கமாட்டார்களென்று சொன்னேன். -

துரைசாமி ஐயங்கார்: தாங்கள் எவரையும் விட வேண்டாமென்று சொல்லியிருக்கும்போது எங்களை விட்டதைப்போல், நல்ல சொக்காய், தலைக்குட்டை போட்டுக்கொண்டு வந்த வேறு மனிதர்களையும் விட்டி ருக்கக்கூடு மல்லவா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/155&oldid=684697" இலிருந்து மீள்விக்கப்பட்டது