பக்கம்:ராஜாம்பாள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு } 53

துரைசாமி ஐயங்கார்: விஷத்தைக் கோபாலன் வாங் கினதாகச் சாட்சியம் இருக்கிறதா?

மணவாள நாயுடு: இல்லை. துரைசாமி ஐயங்கார் கேட்டு முடிந்தவுடனே, இரண்டாவது சாட்சியாகிய சாமி நாயுடுவைக் கூப்பிட் f_fTGT -

பா. கொக்கு துரை: சாமிநாயுடு, உமக்கு என்ன தெரியும்? w.

சாமி நாயுடு: “என் தலையை இரண்டு துண்டாக வெட்டிவிட்டாலும் கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் உன்னைக் கல்யாணஞ் செய்துகொள்ளமாட் டேன்’ என்று ஜனவரிமீ 26வ புதன்கிழமை ராத்தி ராஜாம்பாள் சொல்லக் கேட்டேன். -

பா. கொக்கு துரை: கூடப் பேசினது யாரென்று சொல்ல முடியுமா? - -

சாமி நாயுடு: கூடப் பேசினவர் மெதுவாகப் பேசின. தல்ை இன்னரென்று திட்டமாய்த் தெரியாது.

பா. கொக்கு துரை : அப்பால் என்ன நடந்தது? சாமி நாயுடு: ஒரு கதவு திறந்து மூடப்பட்டது; ஐந்து நிமிஷத்திற்கப்பால் குதிரை வண்டி ஒன்று அங்கே யிருந்து விரைவாக ஒடிற்று. பின்னல் பைசிகிள் வண்டி ஏறி யாரோ பின் தொடரக் கண்டேன். -

பா. கொக்குதுரை: வண்டியிலும் பைசிகிளிலும் போனவர் இன்னரென்று சொல்ல முடியுமா?

சாமி நாயுடு; முடியாது. - துரைசாமி ஐயங்கார்: சாமிநாயுடு, கூடப் பேசினவர் மெதுவாகப் பேசினதளுல் இன்னுரென்று திட்டமாய்த் தெரியாது என்றீரே! பேசினதே கேட்கவில்லையா? அல்லது சத்தம் இன்னருடையதென்றுதான் கண்டு பிடிக்க முடியவில்லையா?

சாமி நாயுடு: கிசு கிசுவென்று பேசினதால் தெரிய வில்லை.

துரைசாமி ஐயங்கார்: ராஜாம்பாள் கிசு கிசு வென்று பேசியிருந்தால் அப்படிப் பேசினது ராஜாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/157&oldid=684699" இலிருந்து மீள்விக்கப்பட்டது