பக்கம்:ராஜாம்பாள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 157

சந்திக்கப் போகும்போது என்ன அபிப்பிராயத்தோடு போனளென்று தங்களுக்குத் தெரியுமா? -

சாமிநாத சாஸ்திரி : கோபாலனைக் கல்யாணஞ் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் போளுள்3

துரைசாமி ஐயங்கார் : அந்த எண்ணத்தோடு போன ளென்று தங்களுக்கு எப்படித் தெரியும்?

சாமிநாத சாஸ்திரி : போகும்போது எனக்கு இக் கடிதம் என் மேஜையின் பேரில் வைத்துவிட்டுப் போளுள்: அதை வாசித்துப் பார்த்தால் என்ன எண்ணத்துடன் போனளென்று நன்றாய் விளங்கும்.

முன்பு குறித்திருக்கும் கடிதத்தைத் துரைசாமி ஐயங் கார் வாசித்துக் காண்பித்து அதைத் தாக்கல் செய்து கொள்ள வேண்டுமென்று சொன்னர். மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அக் கடிதத்தைத் தாக்கல் செய்யாததால் இப்போது அதைத் தாக்கல் செய்யக்கூடாதென்று கொக்கு துரை ஆட்சேபித்தார். துரைசாமி ஐயங்கார் கடைசி நிமிஷத்திற்கூடத் தாக்கல் செய்யச் சட்டம் இருக் கிறதென்று சொன்னதன்பேரில் தாக்கல் செய்து கொள்ளப்பட்டது. - -

துரைசாமி ஐயங்கார்: ஜனவரிமீ 19வ புதன்கிழமை சாயங்காலம் நாலு மணிக்கு ராஜாம்பாள் எங்கே இருந் தாளென்று தங்களுக்குத் தெரியுமா? -

சாமிநாத சாஸ்திரி தெரியும் ; ஜனவரிமீ 19வ. புதன்கிழம்ை சாயங்காலம் மூன்றரை மணிமுதல் ஆறுமணி வரையில் டாக்கர் ஷாப்பில் நானும் அவளும் நகை வாங்கிக்கொண் டிருந்தோம். -

துரைசாமி ஐயங்கார்: கோபாலனுக்கும் ராஜாம் பாளுக்கும் எப்போதாவது விரோதம் உண்டா?

சாமிநாத சாஸ்திரி விரோதமே கிடையாது. இரு வரும் இரண்டு உடம்பும் ஒர் உயிரும் போல் இருந்தார் கள். மேலும் ராஜாம்பாளுக்குத் தீங்கு வருவதாகத் தெரிந் தால் கோபாலன் தன் உயிரைக் கொடுத்தாகிலும் அவ ளைக் காப்பாற்றியிருப்பானே தவிர அவன் கொன்றிருக்க மாட்டானென்று நான் சத்தியங்கூடச் செய்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/161&oldid=684703" இலிருந்து மீள்விக்கப்பட்டது