பக்கம்:ராஜாம்பாள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இராஜாம்பாள்

பா. கொக்கு துரை: நான் நெடுநாளாக உங்கள் ஷாப்பில் லேவாதேவி செய்துகொண் டிருப்பதால் என் னைத் தெரியும். ராஜாம்பாளை எப்படித் தெரியும்?

சுப்பு பிள்ளை ராஜாம்பாளுக்கு ஐந்து வயசானது முதல் சாமிநாத சாஸ்திரிகள் ராஜாம்பாளைக் கூட அழைத்துக்கொண்டு வந்து அவள் எந்த நகைகளைக் கேட் கிருளோ அவைகளை வாங்கிக் கொடுப்பது வழக்கம், ராஜாம்பாள் எப்போதும் விலை உயர்ந்த நகைகளை வேண்டாமென்று சொல்லி, சொற்ப விலையுள்ள நகை களேயே சிறு குழந்தை முதலே விரும்பியதால், எங்கள் ஷாப்பில் இருக்கும் ஒவ்வொரு வேலைக்காரருக்கும் ராஜாம்பாளை நன்றாய்த் தெரியும். -

பா. கொக்கு துரை: மூன்றரை மணிமுதல் ஆறு மணிவரையில் ஷாப்பில் இருந்ததாகச் சொன்னிர்களே, ஏன் அவ்வளவு நேரம் அவர்கள் அங்கே இருந்தார்கள்? சுப்பு பிள்ளை மோதிரம் தயாராக அவ்வளவு நேரம் பிடித்தது; இன்னும் ஏன் வீட்டிற்குப் போய்த் திரும்பி வர வேண்டுமென்று அங்கேயே இருந்தார்கள்.

பா. கொக்கு துரை: டாக்கர் ஷாப்பைப்போல் சிறந்த பேரெடுத்த வியாபாரிகள், சாமிநாத சாஸ்திரிகள் இரண்டு நாளைக்கு முன்னலேயே வருவதாகக் குறிப்பிட்டு எழுதி யிருக்கும்போது, அவர் வரும்போது நகை தயார் செய்யாமல் இருந்தார்கள் என்பதை எப்படி நம்பக்கூடும்? சுப்பு பிள்ளை : குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயமாய்க் கொடுப்பதே எங்கள் ஷாப்பின் வழக்கம். ஆனல் அவர் கள் கேட்டிருந்தபடி சித்திரவேலை செய்யும் முருகேச பத்த ரின் பெண்சாதி அதற்கு முந்தின நாள் இறந்துபோன தால் அவர் வேலைக்கு வரவில்லை. வேறே தகுதியான ஆளேப் பிடித்துச் செய்வதற்குத் தாமதப்பட்டது. - . மூன்றாவது சாட்சியாக எழும் பூர் ஸ்டேஷனில் டிக் கட்டுக் கொடுக்கும் முகுந்தராயரைக் கூப்பிட்டார்கள். துரைசாமி ஐயங்கார்: எழும்பூரிலிருந்து ஜனவரி மீ 27.வ காலே ஆறுமணிக்குப் புறப்படும் மெயில் டிரெயினில் காஞ்சீபுரத்திற்கு யாருக்காவது முதல் வகுப்பு டிக்கட்டு, கொடுத்தீர்களா? . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/164&oldid=684706" இலிருந்து மீள்விக்கப்பட்டது