பக்கம்:ராஜாம்பாள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு } 6 :

முகுந்தராயர் அன்று காஞ்சீபுரத்திற்கு அந்த வண்டியில் பிரயாணஞ் செய்ய யாரும் முதல் வகுப்பு டிக்கட்டு வாங்கவில்லை.

நான்காவது சாட்சியாகிய ஷெல்லி துரை கூப்பிடப் பட்டார்.

துரைசாமி ஐயங்கார்: மிஸ்டர் ஷெல்லி, தங்கள் வேலை என்ன? - . . . .

ஷெல்லி துரை: தப்புக் கையெழுத்துக்களா அல்லவா என்று கண்டுபிடிக்கும் வேலை.

துரைசாமி ஐயங்கார்: தாங்கள் அந்த வேலையில் தேர்ந்தவர்களா? -

ஷெல்லி துரை: ஆம். * . . . ராஜாம்பாளுக்குக் கோபாலனல் எழுதப்பட்டு முத லாவதாகக் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தை நியாயாதிபதியிடமிருந்து துரைசாமி ஐயங்கார் வாங்கி ஷெல்வி துரையிடம் கொடுத்துப் பின்வரும் கேள்விகளைக் கேட்டார். ..

துரைசாமி ஐயங்கார்: மிஸ்டர் ஷெல்லி! அந்தக் கடிதத்தை நன்றாய்ப் பார்த்து அதில் எழுதியிருக்கும் எழுத்துக்களெல்லாம் ஒரே இங்கியால் எழுதப்பட்டிருக் கின்றனவா? அல்லது ஏதாவது மாறுதல் இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

ஷெல்லி துரை : நான் பூதக்கண்ணுடியின் உதவி யால் கால்மணி நேரம் பார்த்ததில் ஒரே ஒர் எழுத்து மாத்திரம் வேறு இங்கியால் எழுதப்பட்டதாகத் தெரி கிறது. *

துரைசாமி ஐயங்கார்: எந்த எழுத்து? ஷெல்லி துரை: 12 மணிக்கு என்று எழுதியிருப்பு தில் இரண்டுக்கு முன்னலிருக்கும் ஒன்று வேறே இங்கி யால் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. -

துரைசாமி ஐயங்கார்: ஆனல் முதலில் இரண்டுமணி யென்று எழுதப்பட்டிருக்கிறது. அப்பால் அதற்கு முன ல்ை ஒன்றைப் போட்டதால் 12-மணி என்று ஆயிற்றாே?

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/165&oldid=684707" இலிருந்து மீள்விக்கப்பட்டது