பக்கம்:ராஜாம்பாள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 6

கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஜந்துக்களிலெல்லாம் சிறந்த ஜன்மம் மானிடப் பிறவி. ஏனென்றால், மானிட ஜன்மமாகிய நமக்குத்தான் நன்மை அல்லது திமையென்று பகுத்தறியும் சக்தியைக் கடவுள் கொடுத் இருக்கிறார். எவனேயோ குற்றவாளியா அல்லவா என்று விசாரணை செய்யும்போது நாம் ஏன் அவ்வளவு சிரத்தை பாய்க் கவனிக்கவேண்டும் என்னும் எண்ணம் கொள்ளா மல் நமது சொந்த வேலையாயிருந்தால் எவ்வளவு ஊக்கத் துடனும் கவனத்துடனும் ஜாக்கிரதையுடனும் பார்ப் போமோ அதைவிட அதிகமாகக் கவனித்து அற்ப விஷ யங்களைக்கூடக் கவனித்துப் பார்த்தால்தான் உண்மை இன்னதென்று விளங்கும். ஜூரர்களுடைய பொதுவான வேலையே அப்படி இருக்க, நம்மைப்போல் உள்ள ஒருவன் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் போது எவ்வளவு ஜாக்கிரதையாய்க் கவனித்துக் குற்ற வாளியா அல்லவா என்று தாங்கள் கண்டுபிடிக்க வேண்டி யிருக்கிறது? தாங்கள் கைதியை அநியாயமாய்க் குற்ற வாளியென்று சொன்னல் அதனல் வரும் பாவங்கள் தங் கள் எல்லோரையும் சேரும். ஆகையால் நன்றாய் ஆய்ந்து ஒய்ந்து பார்த்துத் தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்ளு கிறேன்.

இப்போது கொலை செய்ததாகச் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கும் கோபாலன் சாமானியமானவன் அல்லன். நற்குண நற்செய்கைகளில் நிகரற்றவன். சகல சாஸ்திரங் களையும் படித்தவன். அப்பேர்ப்பட்டவன் கொலை செய் வானு? சாதாரணமான ஒருவன் கொலை செய்வதாயிருந் தால்கூட நிஷ்காரணமாய்க் கொலை செய்ய மாட்டான் அல்லவா? அப்படியிருக்க, நற்குணங்களிற் சிறந்த கோபா லன் கொலைசெய்ததற்குக் காரணம் என்ன இருக்கலா மென்று பாரிஸ்டர் கொக்கு துரையும், மணவாள நாயுடு வும் அபிப்பிராயப்பட்டு ருபிக்க முயன்றார்களென்றும், அவர்கள் சாட்சியங்களால் ரூபித்தார்களா என்றும் சற் றுக் கவனியுங்கள். கோபாலனுடைய சகிக்கக்கூடாத துர்க்குணங்களை ராஜாம்பாள் கண்டு பிடித்ததாகவும், அதனுல் கோபாலனைக் கல்யாணஞ் செய்துகொள்ளக் கூடாதென்னும் எண்ணத்துடன் நீலமேக சாஸ்திரிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/169&oldid=684711" இலிருந்து மீள்விக்கப்பட்டது