பக்கம்:ராஜாம்பாள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 167

காரமாய்க் கோபாலனைக் கல்யாண்ஞ் செய்துகொள்வதற். காகவே போனதாக ஏற்படுகிறது.

கனவான்களே! தன்னைக் கல்யாணஞ் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பி வந்த பெண்ணைக் கோபாலன் கொன்றா னென்றா ல் அதை எப்படி நம்பக்க டும்? கோபாலன் ராஜாம்பாளை இரண்டு மணிக்கு வரச்சொல்வி எழுதியிருந்தான். அந்த இரண்டுக்கு முன்னுல் வாஸ்த வத்தில் யார் கொலை செய்தார்களோ அவர்கள் ஒன்றைப் போட்டு இரண்டு மணி என்பதைப் பன்னிரண்டு மணியாக ஆக்கியிருக்கிரு.ர்கள். ஷெல்லி துரையவர்கள் கொடுத்த சாட்சியத்தால் அப்படி மாற்றப்பட்டிருக்கிற தென்று ருஜூவாகி யிருக்கிறது. அப்பால், மோசம் போனேன் கோபாலா, என்னைச் சுடலைமாடன் தெரு, 29-வது நெம்பருள்ள வீட்டில் குதிலில் ‘ என்று ராஜாம்பாள் எழுதி யிருக்கிருள். அதைப் பாரிஸ்டர் கொக்கு துரையவர்கள் மோசம் போனேன்; கோபாலன் என்னே ச் சுடலைமாடன் கோவில் தெரு, 29-வது நெம்பர் வீட்டில் குதிலில்’ என்று வாசித்தார்கள். கோபாலஇ’ என்பதில் கடைசியிலுள்ள எழுத்துத் தெரியாததால் அவருக்கு எப்படிச் சொன்னல் அநுகூலமோ அப்படி, கோபாலன்’ என்று வாசித்துவிட்டார். . அது கோபாலா’ என்று இருந்திருக்கும். கோபாலா என்று போட்டு வாசித்தால் என்ன ஆகிறது. பாருங்கள். மோசம் போனேன்; கோபாலா, என்னைச் சுடலைமாடன் தெரு’**’ என்றால் அர்த்தம் எப்படி மாறிவிடுகிறது பார்த் தீர்களா கனவான்களே! முந்தின காரியாதி, களையும் பிந்தின காரியாதிகளையும் யோசித்தால் நான் எப்படி வாசித்தேனே அப்படியே இருந்திருக்குமென்று தான் தாங்கள் நினைப்பீர்களல்லாது பாரிஸ்டர் கொக்கு துரை வாசித்ததைப் போல் இருக்காதென்று நம்ப ஏது இருக்கிறது. அப்படி இல்லையென்று சற்றுச் சந்தேகம் இருந்தாலும், அந்தச் சந்தேகத்தில்ை ஏற்படும் அது கூலம் கைதிக்குத்தான் சேரும். உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-ம் நெம்பர் வீட்டில் ராஜாம்பா ளோடு பேசினது அநேகமாய்க் கோபாலன் அல்ல. வென்றே நினைக்கிறேனென்று சாமி நாயுடு சொன்னரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/171&oldid=684713" இலிருந்து மீள்விக்கப்பட்டது