பக்கம்:ராஜாம்பாள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y o 3. x

{} இராஜாமடாள

போகக்கூடாதென்றும், சாட்சியங்களின் சாராம்சங்களைக் கொண்டுதான் தீர்மானஞ் செய்ய வேண்டுமென்றும் சொல்லி உட்கார்ந்தார். உடனே நியாயாதிபதியவர்கள் இரண்டு கட்சியிலுமுள்ள சங்கதிகளையும் சாங்கோபாங்க மாய் ஜூரர்களுக்கு எடுத்துக் காட்டினதன்றி, ஜூரர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கண்டு யாதொரு விதமான அபிப்பிராயமும் கொள்ளக்கூடாதென்றும் , ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே ஆராய்ந்து பார்த்து நியாய மான விஷயங்களைக் கவனித்து அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மற்றவர்களிடஞ் சொல்லி நிவர்த்தி செய்துகொண்டு எவ்விதமான தீர்மானத்திற்கு வந்தார்களோ அதைச் சொல்லச் சொல்லியும், இதில் தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள் அநேகம் இருப்பதால் அவர்களுக்கு யோசனை செய்ய எவ்வளவு நேரம் வேண் டுமோ அவ்வளவு நேரம் கொடுப்பதாகச் சொல்லியும் அவர்களே உள்ளே அனுப்பினர். ஜூரர்களும் யோசனை செய்யவேண்டிய விஷயங்கள் அநேகம் இருப்பதால் குறைந் இது ஒரு மணி நேரமாவது பிடிக்குமென்று சொல்லி உள்ளே போனுர்கள். இந்த ஒரு மணி நேரம் வரையில் ஏன் வீணுக உட்கார்ந்திருக்கவேண்டுமென்று எல்லாரும் ந்து வெளியே போனர்கள். நடேச சாஸ்திரிகளும் ாகசுந்தரியும் எழுந்து லோகசுந்தரி இறங்கியிருக்கும் ஜாகைக்குப் போய்ப் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள். லோகசுந்தரி: சாஸ்திரிகளே! இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் கோபாலனுடைய கதி தீர்மானமாகி விடும். தாங்கள் ஆதிமுதல் கவனமாய்க் கேட்டுக்கொண் டிருந் தீர்களே! ஜூரர்கள் கோபாலனை க் குற்றவாளியென்று சொல்லுவார்களா? அல்லது குற்றவாளி அல்லவென்று விடுதலை செய்துவிடுவார்களா? சொல்லுங்கள் பார்ப் போம்.

கடேச சாஸ்திரி: சுவரின்மேல் இருக்கும் பூனை இந் தப் பக்கம் குதித்தாலும் குதிக்கும்; அந்தப் பக்கம் குதித்தாலும் குதிக்கும். நாம் எப்படிச் சொல்லுவது? இந்தப் பாழும் துரைசாமி ஐயங்கார் கோபாலனுக்கு அநுசரணையாக வாதிக்க வந்ததில் இவ்வளவு தூரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/174&oldid=684716" இலிருந்து மீள்விக்கப்பட்டது