பக்கம்:ராஜாம்பாள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 171

சந்தேகிக்கும்படி நேரிட்டது. இன்னும் வேறே எவரா வது வந்திருந்தால் சந்தேகிக்க வேண்டிய பிரமேயமே. கிடையாது. . .

லோகசுந்தரி: தங்களுடைய சாட்சியம் முழுவதை யும் பொய்யென்று ருஜுப்படுத்தி விட்டாரே! அதனுல் தங்களுக்கு ஏதாவது கெடுதல் உண்டாகுமோ? அன்றே தாங்கள் முதல் வகுப்பு வண்டியில் ஜனவரிமி 27வ வந் தீர்களா என்று இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்கையில் ஏதோ காரணத்தால்தான் அப்படிக் கேட்கிறார்கள் என்றேனே; தாங்கள், வக்கீல்கள் ஏதாவது கேட்டுத் தீர வேண்டுமே, அதற்காகக் கேட்டார் என்றீர் களே. கடைசியாக எப்படிக் கொண்டுவந்து மடக்கிவிட் டார். பார்த்தீர்களா? .

கடேச சாஸ்திரி இதற்கெல்லாம் யார் பயப்படு கிரு.ர்கள்? அந்தக் கிழட்டுப் பிணம் சாமிநாத சாஸ்திரி ராஜாம்பாள் எழுதிய கடிதத்தைக் குறித்து இதுவரையில் ஒன்றும் சொல்லாமல் இருந்து கடைசியில் என் கழுத்தைப் பிடித்ததைப்போல் பிடித்துவிட்டார். எப்படியானல் என்ன? நாம்தாம் கூடிய ஜல் தியில் இந்தப் பாழும் ஊரை விட்டுக் கப்பலேறி யாருக்கும் தெரியாமல் சிங்கப்பூர் போகவேண்டுமென்று தீர்மானித்துக்கொண் டிருக்கிருேமே.

லோகசுந்தரி: எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு ஒரு சங்கதிதான் பயமாயிருக்கிறது. சென்னையிலிருந்து வந்த கோவிந்தன், கோபாலன் குற்றவாளி அல்லவென்று திட்டமாய்க் காட்டும் சாட்சியங்களைக் கண்டுபிடித்திருக் கிறதாகத் துரைசாமி ஐயங்காருக்குக் கடிதம் எழுதின. தாக அவர் இன்று கோர்ட்டில் சொன்னரே. அதைக் குறித்துத் தங்களுக்கு என்ன தோன்றுகிறது? ..

நடேச சாஸ்திரி: அதெல்லாம் பொய்யென்றே நினைக்கிறேன். கண்டு பிடித் திருந்தால் சாட்சியங்களை வைத்துக்கொண்டு சும்மா இருப்பான ? அவன் வேறே வேலையாய் அலைந்துகொண்டு திரிகிருன். துரைசாமி ஐயங்காரைச் சற்றுத் திருப்திசெய்வதற். காக அப்படி எழுதியிருப்பான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/175&oldid=684717" இலிருந்து மீள்விக்கப்பட்டது