பக்கம்:ராஜாம்பாள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 73

டாயமாய் வந்து ரூபிக்கிறேனென்ற கோவிந்தன் வராத காரணம் தெரியவில்லையே என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட ஒரு மணி நேரம் ஆனவுடனே, எல்லோரும் அவரவர்கள் இடங்களில் வந்து அமர்ந்தார்கள். நியாயாதிபதி துரையவர்களும் வந்து அவர் ஸ்தானத்தில் உட்கார்ந்தார்; ஜூரர்களும் யோசனை முடிந்து வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் ஜூரர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்று அவர் கள் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தார்கள். எல் லாருக்கும்மேல் கோபாலன் அதிக ஆவலுடன் அவர் களையே பார்த்துக்கொண் டிருந்தான்.

நியாயாதிபதி ஜூரர்களாகிய கனவான்களே! தாங் கள் எல்லோரும் ஒருவிதமான தீர்மானத்திற்கு வந்து விட்டீர்களா? அல்லது இன்னும் யோசனையில்தான் இருக் கிறீர்களா? . - -

ஜூரர்களின் தலைவர்: தீர்மானித்துவிட்டோம்.

கியாயாதிபதி: கைதி குற்றவாளியா? குற்றவாளி பல்லவா?

ஜூரர்களின் தலைவர்: , குற்றவா***

ஜூரர்கள் குற்றவாளியா அல்லவா என்று சொல்லு வதற்குள் கோவிந்தன் தலையிலும் உடம்பிலும் ரத்தம் ஒழுகிக்கொண்டே இருக்கத் தலைவிரி கோலமாய்க் கோர்ட் டுக்குள் ஓடிவந்தார். இவரைக் கண்டவுடனே ஜூரர் களின் தலைவர் தீர்மானம் சொல்லாமல் சும்மா இருந்தார். கோவிந்தன் துரைசாமி ஐயங்காரிடம் ஓடிவந்து அவருக்கு மாத்திரம் கேட்கும்படி கிசுகிசுவென்று ஏதோ ரகசிய மாய்ச் சொன்னர், உடனே துரைசாமி ஐயங்காரவர் களும் ஒரு துண்டுக் கடிதத்தில் சில சமாசாரங்களே எழுதி நியாயாதிபதியிடம் கொடுத்தார். அவர் வாசித்துப் பார்த்துவிட்டு ஜூரர்களிடம் கொடுத்தார். இதற்குள் ளாகக் கட்டாயமாய்க் கோபாலனைத் தண்டித்து விடுவார் களென்று எண்ணிக்கொண் டிருந்த மணவாள நாயுடுவும் பாரிஸ்டர் கொக்கு துரையும் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள், - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/177&oldid=684719" இலிருந்து மீள்விக்கப்பட்டது