பக்கம்:ராஜாம்பாள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இராஜாம்பாள்

போது மாத்திரம் சிறுவயதில் கல்யாணஞ் செய்யக்கூடா தென்றும், பால்ய விதவைகளுக்கு மறு கல்யாணஞ் செய்ய வேண்டுமென்றும், எல்லா ஜாதியாரையும் ஒரே மாதிரியாகப் பாவிக்க வேண்டுமென்றும், ஜாதி வேற்று மையை வேரோடு கருவறுத்துவிட வேண்டுமென்றும், தாசிகள் கச்சேரிகளுக்குப் போகக் கூடாதென்றும், சாராயம் முதலிய லாகிரி வஸ்துக்களைக் குடிக்கக் கூடா தென்றும் பிரமாதமாய்த் தங்கள் முழுச் சாமர்த்தியங் களோடும் பிரசங்கம் செய்கிறார்கள். ஆளுல் அவரவர்கள் சொந்தத்திற்கு மேற்படி காரியாதிகள் வரும்போது மாத்திரம், ஏன் நாம் முதலிற் செய்யவேண்டும்? யாரா வது நான்கு பேர் முதலில் மேற்படி காரியாதிகளை நடத்தி ரு.ஜூப்படுத்தட்டும். அப்பால் யோசிக்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு மாமூல் பிரகாரம் நடத்திக்கொண்டு வருகி ருர்கள். ஒவ்வொருவரும் யாருக்கு வந்த விருந்தோ என்று இருக்கும் வரையில் நமது தேசம் விருத்திக்கு வருவது அபூர்வம். ஒவ்வொருவரும் தேசவிருத்தி தங்க அளால்தான் ஆகவேண்டுமென்று நினைத்து அதற்கு வேண் டிய காரியங்கள் செய்யும் வரையில் நமது தேசம் விருத்தி யாகாதாகையால், நான் என்னல் கூடியவரையில் எப்படி நடப்பேனென்று ஒப்பி மேற்படி சங்கத்தில் கையொப்பு மிட்டிருக்கிறேனே, அப்படித்தான் நடப்பேன். மற்ற வர்கள் நடக்கவில்லையே, நாம் மாத்திரம் ஏன் அப்படி நடக்கவேண்டும் என்கிருயோ? சுயநலம் பாராட்டும் பேதைகளைப்போல், பேசுவதொன்று நடப்பதொன்றாக நான் செய்வேளுே? ஒரு நாளும் செய்யமாட்டேன். எப்போது ஒன்று செய்வதாய் வாக்களித்தேனே அதனல் நன்மை வந்தாலும் சரி, தீமை வந்தாலும் சரி, அப்படியே நடப்பேனென்பதை நீ இத்தனை வருஷம் என்ளுேடு பழகியும் இன்னும் அறியவில்லேபோல் இருக்கிறது.

கனகவல்லி: சரி. எப்படியாவது கட்டாயமாய் இந்தத் தைமாதத்தில் கல்யாணஞ் செய்துவிட்டு மறு காரியம் பார்ப்பதாய் வாக்களித்தீர்களே! நீங்கள் வாக்குக் கொடுத்துவிட்டு மாறுவதில்லையென்று இப்போது ஒரு நிமிஷத்திற்கு முன்புதானே சொன்னீர்கள்? *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/18&oldid=677384" இலிருந்து மீள்விக்கப்பட்டது