பக்கம்:ராஜாம்பாள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 76 இராஜாம்பாள்

டிக் கேட்டும் நான் அவரைக் கல்யாணஞ் செய்துகொள் ளச் சம்மதிக்காததால் அதிக கோபத்துடன் எழுந்து

>. - . - கதவை மூடிக்கொண்டு வெளியே போனார் .

அங்கே போனதும் நான் அவரைக் கல்யாணஞ் செய் துகொள்ளமாட்டேனென்று ஒரே பிடியாய்ப் பிடிப்பதால்

ாண்டுபோய் என்னே அடைத்துச் சாப்பாடு தண் காடுக்காமல் போட்டுவைத்தால், இரண்டு மூன்று ங்களில் வழிக்கு வந்துவிடுவேனென்றும், கோபாலன் இரண்டு மணிக்கு வரச்சொல்லி எழுதியிருந்த கடிதம் அவர்கள் கையில் அகப்பட்டதால் இரண்டுக்கு முன்னல் ஒன்றைப் போட்டுப் பன்னிரண்டு மணியென்று ஆக்கிய தால் இவ்வளவு சுளுவில் அவர்கள் கையில் நான் அகப் பட்டேனென்றும் பேசிக்கொண்டார்கள்; இதைக் கேட்ட வுடனே ஒரு சிறு துண்டுக் கடுதாசியில், மோசம் போனேன் கோபாலா, என்னேச் சுடலைமாடன் கோவில் தெரு, 29-வது நம்பர் வீட்டிலுள்ள குதிலில்’ என்று எழுதி, அப்பால், என்னைக் கொண்டுபோய் அன்னந்தண் ணிர் இல்லாமல் அடைக்கப் போகிரு.ர்கள் என்று எழுது வதற்குள் ஒருவர் திடீரென்று கதவைத் திறந்து உள்ளே வந்து ஏதோ ஒருமாதிரி வாசனையுள்ள ஒரு துணியை என் முகத்தில் வைத்து அமுக்கிப் பிடித்தார். -

இரண்டொரு நிமிஷங்களில் ஒருவித மயக்கம் உண் டாகிவிட்டதால் அப்பால் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. அப்பால் கண்விழித்துப் பார்க்கையில் மினுக்கு மினுக்கென்று விளக்கு எரிந்துகொண் டிருக்கும் ஒரு குதி வில் என்னைப் படுக்க வைத்திருந்ததாகத் தெரிந்து சட் டென்று எழுந்தேன். கதவிலுள்ள சந்தின் வழியாய்ப் பக்கத்தில் வெளிச்சமுள்ள ஒர் அறை தெரிந்தது. அங்கே யார் இருக்கிறார்களென்று பார்க்கையில் நான் இதுவரை யில் பார்த்திராத ஒரு பெண் மெதுவாக என்னை அடைத் திருக்கும் அறையின் வாசலுக்கு நேராக வந்துகொண் டிருந்தாள். அவளுக்குப் பின்னலிருந்த திரையிலிருந்து யாரோ ஒருவன் கட்டாரியால் அவளைக் குத்தவும் அதே சமயத்தில் என்னைக் கல்யாணஞ் செய்துகொள்ளச் சொல் விக் கட்டாயப்படுத்தினவர் கைத்துப்பாக்கியால் அவளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/180&oldid=684722" இருந்து மீள்விக்கப்பட்டது