பக்கம்:ராஜாம்பாள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட் #81

கல்யாணஞ் செய்துகொள்ளமாட்டேனென்று சொன்ன தாகச் சொன்னள்,

துரைசாமி ஐயங்கார்: தாங்கள் சொன்னதற்கும் ராஜாம்பாள் சொன்னதற்கும் இருக்கும் பேதம் இன்னதென்று தங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் ஏன் அப்படிச் சொன்னிர்கள்?

சாமி நாயுடு: ராஜாம்பாள் சொன்னபடிதான் நான் முதலில் மணவாள நாயுடு அவர்களிடம் சொன்னேன். அப்படிச் சொன்னல் நான் கொலை செய்ததாக என்மேல் குற்றஞ் சாட்டி ஜெயிலில் அடைத்துப் போடுவதாகச் சொல்லிப் பயமுறுத்தி இப்படிச் சொல்லும்படி சொன் ஞர். அப்போதுகூட நான் சொல்லமாட்டேனென்று சொன்னேன். உடனே என்னைப் போலீஸ் ஸ்டேஷ னுக்கு அழைத்துக்கொண்டுபோய்ப் பூட்ஸ் காலால் உதைத் தார். அந்த உதையால் என் பற்களில் ஒன்றுகூட விழுந்துவிட்டது. அப்பால் அவரால் ஆன வரையில் கையாலும் காலாலும் புடைத்ததன்றிப் பக்கத்தில் இருந்த கான்ஸ்டேபில்களையும்விட்டு அடிக்கச்சொன்னர், இந்த அடிகளைப் பொறுக்க முடியாமல் அவர்கள் சொல்வ தைப்போல் சொல்வதாக ஒப்புக்கொண்டு அப்படியே சொன்னேன். -

நியாயாதிபதி: மணவாள நாயுடுவும் கான்ஸ்டேபில் களும் உம்மை அடித்ததற்கு உமக்குச் சாட்சி இருக் கிறதா?

சாமி நாயுடு: “திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை’ என்பதைப்போல் அவர்கள் அடித்ததற்குக் கடவுள் தான் சாட்சி. ராத்திரிப் பன்னிரண்டு மணிக்குமேல் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் அடைத்துவிட்டு நையப் புடைக்கும்போது போலீஸ் வீரரைத் தவிர வேறே யார் சாட்சி இருக்கிரு.ர்கள்? நான் பட்ட உதை களே இப்போது சொன்னதற்கே இனி என்ன அதுபவி கப்போகிறேனே?

நியாயாதிபதி நீர் கட்டாயத்தின்பேரில் அப்படிச் சொன்னேனென்று சொன்னதால் உமது பேரில் தயவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/185&oldid=684727" இலிருந்து மீள்விக்கப்பட்டது