i82 இராஜாம்பாள்
வைத்து ஐம்பது ரூபாய் அபராதம் விதித்தோம். அடரா தம் கொடுக்காவிட்டால் ஒரு மாதம் கடின காவல்.
இப்படிக் கோர்ட்டில் விசாரணை நடந்துகொண் டிருக்கையில் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு எழுந்து கோவிந்தன் இருக்கும் இடத்திற்குப் போய்க் கோவிந்தன் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு பின் வருமாறு சொன்னுர்,
மனவாள நாயுடு: தங்கள் சாமர்த்தியத்தை நன்கு ய் அறியாத நான் முதலில் தங்களிடம் சபதஞ்செய் தேன். நீங்கள் அவைகளேயெல்லாம் பாராட்டாமல் கொலே செய்யப்பட்டது யாரென்றும் கொலை செய்தவர் கள் இன்சூரென்றும் சொல்வதன்றித் தாங்கள் கண்டு பிடித்திருக்கும் சாட்சியங்களையும் தயவு செய்து என்னி டம் சொல்லவேண்டும்,
கோவிந்தன் : நாயுடவர்களே! தாங்கள் அன்று சொன்ன வார்த்தைகளால் எனக்குச் சிறிதாகிலும் வருத் தமே கிடையாது. ஏனென்றால், எந்தக் கேசுக்கு நான்
போளுலும் அந்தக் கேசில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் என்னைத் திட்டுவதே வழக்கம். தாங்கள் அவ்வளவு ஆவ. வாய்க் கேட்பதால் எனக்குச் சொல்வதில் யாதொரு
ஆட்சேபமும் இல்லே.
மணவாள நாயுடுவை நடேச சாஸ்திரிகளும் வோக சுந்தரியும் இருக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொண்டு நடேச சாஸ்திரியைப் பார்த் துக் கோவிந்தன் பின்வருமாறு சொன்னர்,
கோவிந்தன். சாஸ்திரிகளே! தாங்கள் காணுமற். போன சென்னைத் தாசி பாலாம்பாளைக் கண்டுபிடிக்கச் சொன்னீர்களே! பூராவாய் அறிந்த பிற்பாடுதான் சொல்வ தாகச் சொன்னேன் அல்லவா? சுடலைமாடன் கோவில் தெரு, 29-வது நெம்பர் வீட்டில் ஜனவரிமீ 26வ. ராத் திரி, கொலை செய்யப்பட்டவள்தான் தங்களுடைய பிரிய மான தாசி பாலாம்பாள், கொலைசெய்தவர்கள் தாங்கள் ஒன்று; ஷோக் நரசிம்மலு நாயுடு இரண்டு; தங்கள் சமீபத்தில் உட்கார்த்திருக்கும் லோகசுந்தரி மூன்று.