பக்கம்:ராஜாம்பாள்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{

8

4 இராஜாம்பாள்

செய்திருக்க வேண்டுமென்பதைக் கண்டுகொண்டேன். அப்பால் யோசனை செய்து பார்த்ததில் இருவரும், ஒருவர் கொன்றது. ஒருவருக்குத் தெரியாமல் கொன்றிருக்க வேண்டுமென்றும் ஊகித்துக்கொண்டேன்.

மணவாள நாயுடு; இருவரும் சேர்ந்து வரவில்லை என்று எப்படி ஊகித் தீர்கள்?

கோவிந்தன்: கட்டாரியால் வலது பக்கத்திலிருந்து குத்தப்பட்டிருப்பதாலும், துப்பாக்கியால் இடது பக்கத் திலிருந்து சுடப்பட்டிருப்பதாலும், இருவரும் ஒன்று சேர்ந்து கொலைசெய்திருந்தால் கட்டாரியாலாவது மாத் திரம் குத்தியிருப்பார்கள்; அல்லது துப்பாக்கியாலாவது மாத்திரம் சுட்டிருப்பார்க ளாதலாலும், இரண்டும் செய்திருப்பதால் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்திருப்பார்களென்றும் ஊகித்தேன். மேலும் இரண்டு காயங்களும் ஏக காலத்தில் ஏற்பட்டதாகத் தெரிந்ததாலும் ஒருவர் வலது பக்கத்திலும் மற்றாெருவர் இடது பக்கத்திலும் இருந்திருப்பதாலும் ஒருகால் துப்பாக்கியின் குண்டு அவள்மேல் படாவிட்டால் மற்றாெரு பக்கத்தில் இருப்பவர்மேல் படுவதற்கு ஹேது இருக்குமாதலாலும், இருவரும் கலந்து பேசிக் கொண்டு செய்தால் குண்டு குறி தப்பினுல் எதிரில் இருப்பவர்மேல் படுமென்று தெரியுமாதலாலும் அப்படி எதிரிலிருந்து குத்தச் சம்மதிக்க மாட்டார்கள் அல்லவா? அப்படி ஒருவருக்கொருவர் எதிரிலிருந்து குத்தினதாக வும் சுட்டதாகவும் தெரிகிறதால் ஒருவருக்கொருவர் தாக்கல் இல்லாமல் செய்ததாக ஏற்படுகிறது. ஆகவே ஒருவருக்கொருவர் தாக்கல் இல்லாமல் இரண்டு பேர் செய்தார்களென்று ஊகித்து அந்த இரண்டு பேர் இன்னரென்று கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

அப்பால் பிரேதத்தை அதிக ஜாக்கிரதையாகப் பார்த் தேன். பதின்மூன்று வயதுள்ள பெண்ணின் பிரேதமா விருக்காதென்று உடனே அறிந்துகொண்டு, டாக்டர்க ளிடம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது என்ன இருக்கலாமென்று நன்றாய்ப் பார்த்துச் சொல்லும்படி கேட்டேன். அவர்கள் நன்முய்ச் சோதனை செய்து, பதினறு அல்லது பதினேழு வயது இருக்கலாமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/188&oldid=684730" இருந்து மீள்விக்கப்பட்டது