பக்கம்:ராஜாம்பாள்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 1.8%

சொன்னர்கள். டாக்டர்களுக்கு ராஜாம்பாளின் வயது பதின் மூன்றென்று தெரியாதாதலால் ஒருகால் ராஜாம் பாளுக்குப் பதினறு அல்லது பதினேழு வயது இருக்கலா மென்று எண்ணியிருப்பார்கள். மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் டாக்டர்களை வயது என்ன இருக்குமென்று துரைசாமி ஐயங்கார் கேட்டதற்கு டாக்டர்கள் பதினறு வயது இருக் கலாமென்று சொன்னபோது, மணவாள நாயுடவர்கள், என்னடா ... எக்டர்கள் இப்படிச் சொல்லுகிறார்களே! இதன் உண்மையை ஆராய்வோம் என்று யோசனை செய்யாமல் தெரியாத்தனத்தினுல் டாக்டர்கள் அப்படிச் சொல்லுகிறார்களென்று நினைத்தார். நீலமேக சாஸ்திரி களும் மணவாள நாயுடவர்களும் பாரிஸ்டர் கொக்கு துரை யவர்களும் சிரித்தார்கள். அப்பால் பிரேதத்தை நன் ருய்ச் சோதனை செய்ததில் அவள் இடது கையில், பா’ என்னும் எழுத்து, பச்சை குத்தப்பட்டிருந்தது. கையெல் லாம் சுடப்பட்டிருந்ததால் நன்றாய்ப் பார்த்த பிற் பாடுதான் தெரிந்தது. ‘பா’ என்னும் எழுத்து முத லில் எழுதப்பட்டிருந்ததால் கொலே செய்யப்பட்ட பெண்ணின் பேர் பாகீரதி, பார்வதி, பாலாமணி, பாக்கியம் அல்லது, ‘பா’ என்னும் எழுத்தில் ஆரம்பிக் கும் பேர்களில் ஒன்றாயிருக்கவேண்டுமென்றும், அவள் அந்த இடத்திற்கு வந்த காரணத்தையும் அவள் இன்னு ளென்பதையும் அறியவேண்டுமென்றும் யோசனை செய்து கொண்டு ராஜாம்பாளைத் தவிர அந்த ஊரில் வேறே எவராவது காணுமற் போயிருக்கிரு.ர்களா என்று என் ல்ை கூடியவரையில் விசாரித்தேன். எவரும் காணுமல் போனதாகப் பிரஸ்தாபம் வராததால் வெளி ஊரிலுள்ள வர்களில் எவரோ காணுமல் போயிருக்க வேண்டு மென்று நிச்சயித்துக்கொண்டு எப்படியாவது சில தினங் களில் காணுமற் போனவர் இன்னரென்று வெளிவரு மென்று எண்ணிக்கொண்டேன். ஆகவே கொலை செய் யப்பட்டது ராஜாம்பாள் அல்லவென்று திட்டமாய்த் தெரிந்தவுடனே, மோசம் போனேன் கோபாலா, சுடலை மாடன் கோவில் தெரு, 29-வது நெம்பர் வீட்டிலுள்ள குதிலில்’ எ ன் று ராஜாம்பாள் எழுதியிருந்ததால் அந்தக் குதிலில் போய் பார்த்தேன். அங்கே, ‘ந’ என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/189&oldid=684731" இருந்து மீள்விக்கப்பட்டது