பக்கம்:ராஜாம்பாள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இராஜாம்பாள்

னும் எழுத்து மூலையில் எழுதப்பட்ட கைக்குட்டை பொன்று மயக்கத்தைக் கொடுக்கும் குளோரபாரம் என்னும் திராவகத்தில் முக்கிக் கிடந்தது. அதைப் பார்த்தவுடனே, ‘ந’ என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் பேரையுடைய எவரோ ஒருவர் ராஜாம்பாளுக்கு மயக்க முண்டாகும்படி செய்து எங்கேயோ கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கலாமென்று ஊகித்தேன். .

மணவாள நாயுடு; தாங்கள் இந்த விவரங்களைக் கண்டுபிடித்தவுடனே என்னிடம் சொல் வியிருந்தால் இத்தனை நாட்கள் கோபாலன் சிறையில் இருக்கமாட் டானே! தாங்கள் ஏன் அப்போதே என்னிடம் சொல்ல; வில் துே? • ,

கோவிந்தன்: நான் உடனே உங்களிடம் சொல்லாத தற்குக் காரணம் இரண்டு: ராஜாம்பாளைக் கொண்டு போய் ஒளித்து வைத்திருந்தவர்களுக்கு அவள் உயிருடன் இருக்கிற சமாசாரம் நமக்குத் தெரியுமென்று தெரிந்தால் அவளே உடனே கொலையாவது செய்து போடுவார்கள்; அல்லது நம்மால் கண்டு பிடிக்க முடியாத இடத்திலாவது கொண்டுபோய் ஒளித்து வைத்துவிடுவார்கள். ஆதலால் அவள் உயிருடன் இருக்கிற சங்கதி நமக்குத் தெரியா தென்று நினைத்துக்கொண் டிருக்கட்டுமென்பது ஒன்று; இரண்டாவது: சகிக்கக் கூடாத கோபாலனுடைய துர்க் குணத்தால் ராஜாம்பாள் கோபாலனைக் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டேனென்று சொன்னதாகவும் அந்தக் காரணத்தாலேயே கோபாலன் கொலை செய் திருப்பானென்றும், ஒன்றும் தெரியாதபோதே தாங்கள் கோர்ட்டில் சொன்னீர்களே! இதைத் தங்களிடம் அப் போதே சொல்லியிருந்தால் கொலே செய்யப்பட்ட பெண் ணேக் கோபாலன் ரகசியமாய் வைத்திருந்ததாகவும் அந்த விவரம் ராஜாம்பாளுக்குத் தெரிந்து அவளேக் கூட்டிக் கொண்டு வந்து கோபாலனிடத்தில் ரூபிக்க வந்ததாக வும், ரூபித்த பிற்பாடு கோபாலனைக் கல்யாணஞ் செய்து கொள்ள மாட்டேனென்று ராஜாம்டாள் சொன்னதன் பேரில் அவன் வைத்திருத்த பெண்ணைக் கொன்றுவிட்டு ராஜாம்பாளை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிருனென்றும், ஒளித்து வைத்திருக்கும் இடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/190&oldid=684732" இலிருந்து மீள்விக்கப்பட்டது