பக்கம்:ராஜாம்பாள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் #87

தைச் சொல்லச்சொல்லிக் கோபாலனுக்குப் போலீஸ் மரியாதைகள் ஒவ்வொர் ராத்திரியும் செய்வீர்களென் றும், நான் தங்களிடம் சொல்வதால் கோபாலனுக்குப் பிரதிகூலம் உண்டாகுமே தவிர அநுகூலம் உண்டாகா தென்றும் எனக்கு நன்றாய்த் தெரியுமாகையால்தான் சொல்லவில்லை. லோகசுந்தரிக்கும் கோபாலனுக்கும் நடந்த சம்பாஷணையிலிருந்து லோகசுந்தரி இதில் சம்பந்தப் பட்டிருக்கவேண்டுமென்று ஊகித்தேன். ராஜாம்பாளை அன்று ராத்திரி 2 மணிக்கு வரச்சொல்லிக் கோபாலன் எழுதினதாகத் திட்டமாய் ச் சொன்னதாலும் கடிதத் தைப் பார்க்கையில் 12 மணி என்று எழுதியிருந்ததாலும், இரண்டுக்கு முன்னல் ஒன்றை யாரோ போட்டார்க ளென்று ஏற்பட்டது. யாரிடத்தில் அந்தக் கடிதத் தைக் கொடுத்தனுப்பினுனென்று கோபாலனைக் கேட்ட, தற்குத் தன் வேலைக்காரளுகிய முருகனிடத்தில் கொடுத் தனுப்பினதாகவும், முருகன் அன்றே ரஜா வாங்கிக் கொண்டு வெளியூருக்குப் போனதாகவும் கோபாலன் சொன்னன். - - -

முருகன் வாஸ்தவத்தில் ஊருக்குப் போளுஞ. இல்லையாவென்று கண்டறிய வேண்டுமென்று விசாரித் ததில், அவன் ஊருக்குப் போகவில்லையென்றும், அவன் கூத்தியாராகிய ருக்மிணியின் வீட்டில் ஒளிந்திருப்ப தாகவும், சாமியார் போல் வேஷம் போட்டு அறிந்தேன். அப்பால் போலீஸ்காரனைப்போல் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவன் பேரில் வாரன்டு கொண்டுவந் திருப்பதாகவும், உண்மையைச் சொன்னுல் அவனைக் காப்பாற்றுவதாயும், இல்லாவிட்டால் மாட் டி விடுவ தாயும், நயத்திலும் பயத்திலும் சொன்னதன் பேரில் அவன் ராஜாம்பாள் வீட்டிற்குக் கோபாலன் கொடுத்த கடிதத்தைக் கொண்டு போகையில் லோகசுந்தரி கூப் பிட்டு அவனுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்து அக் கடிதத்தை வாசித்துப் பார்த்துவிட்டு உள்ளே கொண்டு போய் ஒரு நிமிஷத்திற்குள் மறுபடியும் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்து ராஜாம்பாளிடம் கொடுத்துவிடச் சொன்னதன்றி ஊருக்குப் போகவேண்டுமென்று பொய்த் தந்தி காண்பித்துக் கோபாலனிடம் ரஜா வாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/191&oldid=684733" இலிருந்து மீள்விக்கப்பட்டது