பக்கம்:ராஜாம்பாள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 189

வாங்கி வந்ததாகத் தெரிந்து, அந்த வண்டிக்காரன் எங்கே என்று விசாரித்ததில் அவன் வேலூருக்குப் போயிருப்பதாகத் தெரிந்தது.

உடனே வேலூருக்குப் போக வேண்டுமென்று பிரயத்தனம் செய்துகொண் டிருக்கையில் நடேச சாஸ்திரி என்னைத் தேடி வந்தார். அவர் வந்த காரணம் என்ன வென்று கேட்டதில் தாசி பாலாம்பாளை அதற்கு முந்தின நாள் ராத்திரியிலிருந்து காணுேம் என்றும், அவளைக் கண்டுபிடித்தால் சரியான வெகுமதி கொடுப்பதாகவும் சொன்னர். பாலாம்பாளேக் காணுேமென்று அவர் சொன்னவுடனே, பா’ என்னும் எழுத்தைக் கையில் எழுதப்பட்டவள் காஞ்சீபுரத்தில் இறந்து போயிருந்ததால் அநேகமாய் இறந்தது தாசி பாலாம்பாள்தானென்று நிச்சயித்துக்கொண்டு, அதன் உண்மையை ஆராய்வதற் காக நடேச சாஸ்திரிகளுடன் பாலாம்பாள் வீட்டிற்குப் போனேன். அங்கே போனவுடன் தாய்க்கிழவி நடேச சாஸ்திரிகள் இருக்கிற வரையில் உண்மை சொல்ல மாட்டாளென்று எண்ணிக்கொண்டு, அவரைத் தந்தி மூலமாய் ஒருகால் பாலாம்பாள் காஞ்சீபுரம் போயிருக் கிருளா என்று அவருடைய இஷ்டர்கள் காஞ்சீபுரத்தில் யாராவது இருந்தால் கேட்டு வரும்படி அனுப்பிவிட்டுத் தாய்க்கிழவியிடம் பாலாம்பாள் ஜனவரி மீ 26வ. சாயங் காலம் போளுளென்று சொன்னவுடனே அவள் உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டாள்.

பாலாம்பாள் கைப்பெட்டியைத் தேடியதில் மை ஒத்தும் கடிதம் ஒன்று அகப்பட்டது. அதைத் திருப்பி வைத்து விளக்கு வெளிச்சத்திற் பார்த்ததில், ‘லோக சுந்தரி, காஞ்சீபுரம்’ என்று எழுதியிருந்தது. ஆகவே பாலாம்பாள் லோகசுந்தரியின் வீட்டி ற் கு த் தா ன் போயிருப்பாளென்று தெரிந்து, லோகசுந்தரியின் வேலைக் காரியை நயத்திலும் பயத்திலும் கேட்டதில் பாலாம்பாள் வந்தது வாஸ்தவ மென்றும், லோகசுந்தரியின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டாளென்றும் தெரியவந்தது. நான் கேட்டதாக யாரிடமும் சொல்லவேண்டாமென்று சொல்லி அவளுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டுக் காஞ்சீபுரத்திலுள்ள மருந்து ஷாப்புகளில் ஜனவரிமீ 26வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/193&oldid=684735" இலிருந்து மீள்விக்கப்பட்டது