பக்கம்:ராஜாம்பாள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.காவிந்தன் விவரித்துச் சொல்லல் 191

தினந்து தினங்கள் நரசிம்மலு நாயுடுவுடன் சுற்றினதில் பதினைந்தாவது நாள் ராத்திரி சுமார் பன்னிரண்டு மணிக் குக் கொள்ளிக்கண்ணன் என்னும் பிரபல போக்கிரி ஒருவன் மெதுவாக நரசிம்மலு. நாயுடுவண்டை வந்து தன் கூத்தி பாராகிய பாவாடை என்பவள் ராஜாம்பாளே அடைத்து வைத்திருப்பதற்கு ஆட்சேபிப்பதாகவும், ஆகையால் கடிய ஜல்தியில் வேறு ஏற்பாடு செய்து ராஜாம்பாளே அழைத்துக்கொண்டு போகும்படியும் சொன்னன். நரசிம்மலுநாயுடு உடனே நூறு ரூபாய் கொடுத்து இன்னும் சில தினங்கள் மாத்திரம் ராஜாம்பாளை அந்த இடத் திலேயே வைத்திருக்கும்படி வேண்டிக்கொண்டார். அவன் சம்மதிக்காதவனைப்போல் பாவனை செய்துகொண்டு போன்ை. - -

உடனே நரசிம்மலு நாயுடுவை விட்டுவிட்டுக் கொள் வளிக்கண்ணனின் கூத்தியாராகிய பாவாடை என்பவள் எங்கேயிருக்கிருளென்று என்னுல் ஆனவரையில் விசாரித் தும், கொள்ளிக்கண்ணனுக்குப் பயந்துகொண்டு யாரும் சொல்லவில்லை. நேற்றைய தினம் சிந்தாதிரிப்பேட்டை பில் போய்த் தெய்வாதுகூலமாய் அவளையே பார்த்துப் பாவாடை யென்பவளேத் தெரியுமா என்று கேட்டேன். அவள், தன் பேர்தான் பாவாடை என்று சொல்லி என் னத்திற்காகக் கேட்கிறீரென்று கேட்டாள். இதற்குள்ளாக எதிரிலிருந்த கள்ளுக்கடையில் குடித்துக்கொண் டிருந்த கொள்ளிக்கண்ணன் யாருடன் சல்லாபமாய் விளையாடு கிருயென்று சொல்லி அவளை அடிக்க வந்தான். நான் அவள்மேல் அடி விழாதபடி தடுக்கவே என்ன அடிக்க வந்தான்; என்மேல் அடி விழாதபடி தடுத்துக்கொண்டு அவனைத் திருப்பி அடிக்கவே அவன் அடிபொறுக்கமாட் டாமல் கீழே விழுந்துவிட்டான். இதற்குள்ளாகக் கொள் வளிக்கண்ணனின் சீஷனுகிய அமாவாசை என்பவன் ஓடிவந்து உன்னல் அல்லவா என் வாத்தியாருக்கு அடி விழுந்ததென்று கையிலு:இ வள பேணுக்கத்தியால் பாவாடையை மார்பில் குத் திவிட் டான். அவள் கீழே விழுந்துவிட்டாள். அவள் காயங்கள் எப்படியிருக்கின்றன என்று நான் பார்த்துக் கொண்டிருக்கையில் கொள்ளிக்கண்ணனும் அமாவாசை யும் ஒடிவிட்டார்கள். உடனே பாவாடை என்பவளை ஆஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/195&oldid=684737" இலிருந்து மீள்விக்கப்பட்டது