பக்கம்:ராஜாம்பாள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இராஜாம்பாள்

1.

நடேசன் என் கூடப் பிறந்தவனென்று நான் சொல்வதாக நீங்கள் நினைத்துக்கொள்ளக்கூடாது. பெண்கள் முக்கிய மாய்ப் பிரியப்படும் அழகில் கோபாலன் சிறந்தவன ? நடேசன் சிறந்தவன ? நல்ல உடுப்புகள் துரைகளைப் போல் கோபாலன் போட்டுக்கொள்ளுகிருஞ ? நடேசன் போட்டுக்கொள்ளுகிருன? சாதாரணமாய்ப் பெண்களிடத் தில் சங்கோசமென்பதில்லாமல் நடேசன் பேசுகிருன்; ஆனல் கோபாலனே பெண்களைக் கண்ட மாத்திரத்தில் ஆலகால விஷத்தைக் கண்டவன்போல் நடுங்குகிருன், அப்பேர்ப்பட்டவனுக்கு, இறந்ததெல்லாம் போக நமக்கு இருக்கும் ஒரே குழந்தையைக் கட்டிக் கொடுத்துவிட்டுப் பின்னல் கண்ணிர் சொரிந்துகொண் டிருப்பதில் என்ன பயன்?

சாமிநாத சாஸ்திரி நீ என்ன சொன்னலும் சரி : பரீட்சையில் தேருத அந்த முட்டாள் நடேசனுக்கு நம் பெண்ணே நான் கொடுக்கவே மாட்டேன். ஆதிமுதலே நன்றாய்ப் படிக்கச்சொல்லித் தலையில் அடித்துக்கொண் டேனே! வீட்டில் வந்து சொல்லிக்கொடுப்பதற்காக உபாத்தியாயரை வைத்து அவருக்கு மாதம் இருபது ரூபாய் கொடுத்து வந்தேனே, உபாத்தியாயர் முன் வாசலில் வந்தால் அவன் பின்வாசல் வழியாய் எங்கே யாவது ஒடுவான். குறிப்பிட்ட நேரம் வரையில் அவர் காத்திருந்துவிட்டு அவர்பாட்டில் போவார். இந்தச் சங்கதிகளெல்லாம் என்னிடம் சொன்னல் நான் நடே சனக் கண்டிப்பேனென்றும், அவன் துஷ்டனென்று நினைத்துக் கொள்வேனென்றும் எண்ணிக்கொண்டு மறைத்துவைத்தாய். அதன் முடிவு அவன் முழுச் சோம் பேறியாகி எந்த வேலைக்கும் தகுதி இல்லாமற் போய் விட்டான். அவன் கெட்டதற்குக் காரணம் நீதான். குழந்தைகள் தப்புச் செய்வதைப் பெற்றாேர் கண்டால் ஒளிக்காமல் அப்போதைக்கு அப்போது கண்டித்து மறு படியும் தப்புச் செய்யாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிக்கு இல்லாமல், சொன்னல் தகப்பஞர் அடிப்பாரே என்று தாயார் மறைத்துவைத்தால், தப்பு கள் ஒன்று நூருகி, நூறு ஆயிரமாகி நாளுக்குநாள் சுளைகள் வளருவதுபோல் வளருமே யல்லாமல் குறைவ தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/20&oldid=677386" இலிருந்து மீள்விக்கப்பட்டது